Moving Image

Wednesday, January 6, 2016

ஆறுமுகத்தம்பிரானின் பிரமிட் தியானபீடம்

                                                               ஓம்

AARUMUGATH THAMBIRAN PYRAMID MEDITATION HALL

      பழனியாண்டவரை தரிசித்து விட்டு குன்றில் இருந்து இறங்கினால் 10-15 நிமிட தூரத்தில் உள்ள ஆலாவூரணி்க்கரையில் இருக்கும் அய்யன் ஆறுமுகத்தம்பிரானின் பிரமிட் தியான மண்டபத்தை அடையலாம்.





                       
     
       படத்தில் மேலே தெய்வீக சக்திகளை ஆகர்ஷித்து பெருக்கித் தரும் பிரமிட்டைக் காணலாம்.



                                                 

 கருவறை லிங்கம் மற்றும் இராஜ அலங்காரத்தில் முருகப்பெருமானைக் காணலாம். கருவறை விதானத்தில் பிரமிட்டைக் காணலாம்.





                                                  
                                     தரையிலும் பரமிட் பதிக்கப்பட்டுள்ளது.                   .                  



                                           
                   
          

       அய்யனின் -- சிவசுப்ரமணிய, சக்தி பாணியான ஞான முருகனிடம் ஏற்பட்ட ஓர்முகப்பட்ட  பக்தி, அதனால் கிடைத்த யோக சித்தி மற்றும் வைத்திய ஞானம், மக்களுக்கு வைத்தியத் தொண்டு என்று சதா இறையுடன் இணைந்த நிலையில் மக்களுடன் வாழ்ந்து, தான் சித்தியடையும் நாளைத் தெரிவித்து இறையோடு கலந்த அற்புதமான தவவாழ்வு நெஞ்சை நிறைத்து உள்ளம் உருக வைக்கிறது.

         அவர் பெற்ற ஞானங்களை நாமும் பெற அவரை வேண்டுவோம். இங்கு தன்னை நாடி வரும் அடியவர்களுக்கு அய்யன்  அவர்தம் வாழ்க்கை மிகச் சிறப்பாக, மேலான வாழ்க்கை வாழ அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். அனைவரும் இங்கு வந்து அவரை உளமார தியானித்து தம்பிரானின் பரிபூரண அருள்பெற்று மேலான வாழ்வு பெற வருக! வருக!


அடுத்த பதிவில் மண்டபச் சுற்றுச் சுவரில் இருக்கும் தம்பிரானின் வாழ்க்கையை அழகுறக் கூறும் வண்ண புடைப்புச் சித்திரங்களைக் காணலாம்.

No comments:

Post a Comment