Moving Image

Wednesday, June 8, 2016

விரைவில் திருமணம் நிகழ- திருப்புகழ் விறன்மாறன் ஐந்து!

                                                               ஓம்

       இன்று youtube -ல் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தியின் ஜீவ நாடியில் முருகப்பெருமான் உரைத்தபடி கந்த சஷ்டியன்று  ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அடியார்களுடன் செய்த திருப்புகழ் வேள்வி கண்டேன். விறல்மாறன் ஐந்தில் இருந்து கடைசி பாடலை அற்புதமாக பாடி செய்த யாகத்தின் சிறிய video. இனிமையான ராகத்தினால் உடனே மனதில் இருத்திக் கொள்ள  முடிகிறது. அதன்  video link


  https://youtu.be/8rTJY4LNwps

இதை தினமும் 6 முறை சொல்லிவர, திருமணம் ஆகாதவர்க்கு விரைவில் திருமணம் நிகழும்... ! இது வாரியார் வாக்கு! இனி பாடல்!

விறல்மாரன் ஐந்து மலர்வாளி சிந்த
மிகவானில் இந்து வெயில்காய
மிதவாடை வந்து கழல்போல ஒன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மதிபாளா
மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் அறிந்த அதிதீரா

அறிவால் அறிந்துஉன் இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே!

பொருள்:

[பின்பாதி பார்த்து, பிறகு முன்பாதி!]

"மறிமானுகந்த இறையோன்"

தவங்கள் செய்து வலிமையடைந்து பணிவினை மறந்து தருக்குடன் அலைந்த தாருகவனத்தின் முனிவர்கூட்டச் செருக்கினை அடக்க சிவபெருமானும் அழகியவுருவில் அவர்முன் நடக்க,
 மையலில் மயங்கிய முனிவர் பெண்டிர் அழகிய தமிழ்மகன் பின்னே நடக்க ஆத்திரமுற்ற முனிவர் கூட்டம்
அழகனை அழிக்க யாகங்கள் செய்ய
அதனில் கிளம்பிய சிறுமான் வடிவை
அம்பல வாணன் மீதே ஏவ
அன்புடன் சிரித்து அப்புள்ளிமானை
தன்னிரு விரலால் தயவுடன் எடுத்து
கரங்களில் சூடிய கயிலைப் பெம்மான்

"மகிழ்ந்து வழிபாடு தந்த"

செருக்கினால் குமரனைப் பணியாதொழித்த பிரமனை அழைத்து மூலப்பொருளாம் பிரணவத்தொலியின் பொருள்தனைக் கேட்டு
அதனை அறியா திகைத்த நான்முகன் தலையினில் குட்டி சிறையினில் தள்ளி சிருட்டித்தொழிலைத் தானே செய்து க்ந்தவெற்பினில் கம்பீரமாக
கந்தக்கடவுளும் அமர்ந்திட்ட வேளையில், கண்நுதற்கடவுள் குமரனை அழைத்து பிரமனைச் சிறைவிடப் பரிவுடன் சொல்ல,
ஐயனின் சொல்லை மகிழ்வுடன் ஏற்று

பிரமனை விடுத்து, புத்திகள் சொல்லி
தந்தையுடனே தனித்திருக்கும் காலை,
பிரணவப்பொருளைத் தனக்கும் சொல்ல
அப்பனும் வேண்டிட சுப்பனும் மிடுக்காய்
இடம்,பொருள், ஏவல் அறிந்து
கேட்டலும் சொல்லலும் நிகழ்ந்திடல் வேண்டும்
எனவே உரைக்க, அதனின் தத்துவம்,
சீடன் பணிவின் திறனை இந்த
உலகுக்குணர்த்த, அருட்பெரும்ஜோதி
தணிகை சென்று கண்களை மூடி
ஒரு கணப்பொழுது தவமுமியற்ற
[தணிகை மலைக்கு இதனால் "கணிக வெற்பு" என்னும் பெயரும் இதனால் வந்தது!]
சுப்பிரமணியன் அவர்முன் தோன்ற, ஆலவாய் அண்ணல் வடதிசை நின்று
குருவின் முன்னே பணிவுடன் வணங்கி மூலப்பொருளின் பொருளுரை கேட்டார். ஐம்முகக்கடவுள் அறுமுகக்கடவுளின்    சீடனாய் இருந்து குருவிடம் கேட்டல் எப்படி என்பதைப் பாருக்குணர்த்திய,
"மதிபாளா"   - ஞான வடிவினரே!

"மலை மாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் எறிந்த"

கெடுமனங்கொண்ட கொடுங்கோலரக்கன் சூரன் என்பான் சிவனை வணங்கிப் பலவரம் பெற்று தம்பியர் துணையுடன் தேவர் மானிடர் முனிவரை வருத்தி ஆட்சி செய்யும் வேளைதன்னில், முனிவரும் தேவரும் இறைவனை துதிக்க ஐயனும் அவர்மேல் கருணை கொண்டு
நெற்றிக்கண்ணில் தீப்பொறி கிளப்பி ஆறுமுகனாம் ஓருரு உதித்தனன்!

சக்திவேற் படையைத் தாயவள் அளிக்க அதனைக் கொண்டு கிரௌஞ்சமலை பிளந்து தம்பியரைப் போர்க்களத்தில் வென்று
சூரனைப் போரில் பொருதிய வேளை அண்டரும் விண்டரும் நடுங்கிடும் வடிவில் மாமரமாகி சூரன் நின்றனன்.மாமர அசைவினில் அண்டம் நடுங்க
அதனுடன் சேர்ந்து அகிலமும் ஒடுங்க அதனைக் கண்ட செந்தில்வேலோன்
வேற்படைவிடுத்து 'உடலைப் பிளந்து வருகுதி!' என்று ஆணை பிறப்ப,

சங்கார வேலும் காற்றினைக் கிழித்து, ஒளியினைக் கிழித்து, விண்ணினைக் கிழித்து தீச்சுடர் பரப்பி நிலத்தில் நிமிர்ந்த மராமரம் தன்னை கூறாய்ப் பிளக்கும் "அதிதீரா" -வீரச்செயல் புரிந்திட்ட மாவீரனே!

"அறிவால் அறிந்து இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே"

பாசம் என்னும் ஒருபேய் வாட்டும் பசுவெனும் மறுபேய் இறைவனை மறைக்கும். இவ்விரு மாயை இரண்டையும் ஒழித்து மெய்யறிவாலே இறையை உணர்ந்து

நீயே சரணம் எனும் நினைவாலே
கந்தனின் திருத்தாள் மலரடி பணிந்து
வேண்டும் அன்பர்கள் வாழ்வினில் தொடரும்
இடர்களை நொடியில் அகற்றிடும் தலைவா!

"அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே!"

அழகே உருவாய் செம்பொன் நிறமாய்
திகழும் மயிலின் மேலே அமர்ந்து
செந்தூர் என்னும் சீரலைவாயில்
மகிழ்வுடன் அருளும் பெருமைக்குரியோனே!

"விறல்மாரன் ஐந்து மலர் வாளி சிந்த"

இவனது கணையால் மயங்குவர் கோடி. எவரையும் வீழ்த்திடும் காமக்கணையோன் முனிவருமிவனது கணை பிழையாரே. தேவரும் கெட்டே மதியழிந்தொழிந்தார் பிரமனும் மாலுமே தப்பியதில்லை
எனவே இவனே விறல்மாரனாவான்! அவனே அழகிய மன்மதன் என்பான்!
அவனது கையில் வில்லொன்றுண்டு அவன் தொடு கணையோ ஓரைந்தாகும்!

தாமரைக் கணையால் உன்மத்தம் பிறக்கும்
மாவின் கணையால் காதல் விளையும்
அசோகக் கணையால் கூடுதல் நிகழும்
முல்லைக் கணையால் விரகம் விளையும்
நீலக் கணையால் ஈர்த்தல் நிகழும்!


இவ்வைந்து கணைகளும் ஒருங்கே செலுத்தி மாறன் கணைகள் என்னை வருத்த,

"மிகவானில் இந்து வெயில் காய"
[இதனை "வானில் இந்து வெயில் மிக காய" எனப் படிக்கவும்]

சந்திரன் கணைகள் காதலைக் கூட்டும் வானில் வீசும் சந்திரக் கணைகள்
பகலில் கொளுத்திடும் வெயில் போல் காய்ந்திட மிகவே துன்பம் காதலில் வருத்த,

"மித வாடை வந்து தழல் போல ஒன்ற"

குளிரும் கிரணம் சுடுவது என்றால் வீசும் தென்றலும் வெந்திடுமன்றோ!
மெல்லிய தென்றல் வீசுதல் கூட நெருப்பினைப் போலே சுடுவது போல,

"விலைமாதர் தந்தம் வசை கூற'
வினைவசம் தம்மை இழந்திட்ட மகளிர் மனம்போன வண்ணம் சுடுமொழி கூறி வதை செய்திடவும்,

"குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட
கொடிதான துன்ப மயல் தீர"

சீவனென்னும் ஆன்மா ஐம்புலனாம் வேடுவரின் ஆளுகையில் அகப்பட்டு உடலென்னும் மலைக்குள்ளே உனைச் சேரும் வழியின்றி உழலுவதைப் பார்க்கிலையோ! பரமாத்மா உடன் சேரும் நாளைத்தான் ஜீவாத்மா
வெகுநாளாய்க் காத்திருந்து விருப்புடனே நாடுதம்மா! ஐம்புலனும் வேடுவராய் அலைக்கழித்து கொடுமைசெய மலைநடுவே பதுங்கியிரும் பறவை படும் துயர் போல ஜீவாத்மா மயக்குற்ற துயர் நீங்கி சுகம் விளைய,

"குளிர்மாலையின்கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ"

குளிர் பரவும் மாலைநேர வேலையதில் நின் மார்பில் சூடிநிற்கும் மணமாலை தனைத் தந்து என் துயர் தீரும் நிலைதந்து இவண் வந்து
எனைச் சேர்த்து அணைய மாட்டீரோ, குமரவேளே!!!

அலைவாய்- திருச்செந்தூர்.

பொருளுக்கு நன்றி- VSK.

Monday, March 21, 2016

பிருகு மகரிஷி அருள் நிலையத்தில் இராமதேவர் பூசை மற்றும் விளக்கு பூசை 20-3-16

                                                                      ஓம்
 POOJA FOR RAMADEVAR AND MUPPERUM DEVIYAR AT  BRIGHU MAHARISHI       ARULNILAYAM, MARUDERI
   
        நேற்று பங்குனி 7ம் தேதி வளர்பிறை பிரதோஷம், மருதேரி பிருகு மகரிஷி அருள் நிலையத்தில் நடைபெற்ற  இராமதேவர் பூசை மற்றும் விளக்கு பூசையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. குடிலின் மஹிமை, சித்தர்களின் வரவு பற்றியும் பிருகு மகரிஷி சன்மார்க்க சங்கத்தவரான திரு. சீனிவாசன் அவர்கள் அருமையாக விளக்கினார். மும்மூர்த்திகளின் ஆசி பெற்ற பின்னரே ஒரு தலம் சித்தர்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கும் தகுதி பெறும் என்றார்.    சித்தர்கள் ஒவ்வொருவராக ஐக்கியமாகும் இப்புண்ணிய தலத்தின் பெருமையை  மேலும் அருமையாக விளக்கினார். அதைக் கேட்க கேட்க மிகுந்த பரவசம் அடைந்தோம். அதே பரவச உணர்வுடன் சித்தர்களின் ஆசியுடனும் இத்தலப் பெருமைகளை பகர்கின்றேன்.

       இவ்விடத்தில் இருக்கும் அகோர வீரபத்திரர் இத்தலம் பிருகு மகரிஷி திருப்பாதம் பட்ட தலம் எனவும் அவர் இங்கு வீற்றிருந்து அருள்பாலிப்பார் என வாக்குரைத்துள்ளார். பின்னர் திருவொற்றியூர் ஸ்ரீ பிருகு மகரிஷி நாடி நிலைய அருள்வாக்கில், பிருகு மகரிஷி இத்தலத்தில் எவை எவை எப்படி அமைய வேண்டும் எனக் கணித்துக் கொடுத்துள்ளார். அவ்வாறு அமையப் பெற்ற அத்தல சிறப்புகளை இப்படங்கள் விளக்கும்.

       அருள் நிலைய தலைவாசலில் நுழைந்தவுடன்   நேராக, சற்றுத் தொலைவில், ஒரு கிணறு. அருகிலேயே பல நூறடி போர் போட்டு நீர் எடுக்கின்றனர். ஆனால் பிருகு மகரிஷி குறிப்பிட்ட இடத்தில் கிணறு



                                                         
தோண்டியதால் சில அடிகளிலே நீர் ஊற்றெடுத்தது. அருள்வாக்கின்படி கிணற்றின் வலப்புறத்தில் நந்தி தேவரும் மறுபுறத்தில் அன்னைக் காமதேனுவும் அமைத்துள்ளார்கள். இங்கு வரும் அனைவரும்  முதலில் இக்கிணற்று நீரில் கை, கால்கள், முகம், கழுத்து கழுவி பின்னர் நந்தி தேவரையும் காமதேனுவையும் வழிபட்டு பின்னர் அருள் நிலையம் செல்ல வேண்டும்.
கிணற்றருகிலிருந்து எடுத்த அருள் நிலையப் படம்


 4 அழகியத் தூண்களுடன் அருள் நிலைய வாயில்
       நேற்று பிருகு மகரிஷி அருள்வாக்கின்படி, வரும் ஆண்-பெண் பக்தர்களை சிவ-சக்தியாகக் கருதி, பாதங்களை நந்தியாகக் கருதி மஞ்சள் நீரால் பிருகு மகரிஷி சன்மார்க்கத்தினர் பாதபூசை செய்த பின்னர்  பூசைக்கு அனுப்பினர். இப்பூசை பற்றி வந்த அருள்வாக்கு:

பிருகு மகரிஷியின் சீவ வாக்கு 

தான்முறையே சித்தர்கள் ஆசி வேண்டி
நுட்பமாய் கயல்திங்கள் ஆதி வாரம்
நிச்சயித்த ஆயில்ய மகத்தின் சந்தி  

To attain the blessings of Siddha per principles
in the month of panguni on first sunday (20th March)
as destined in the time when ayilyam and Magam starmeets

மகத்துவமாய் மலைகடவுள் கூடல் நாதன் மொழிந்த விதம் சுந்தரானந்தன் தொடர்ச்சியாக
உகந்ததொரு பூசைவிழா இராமதேவருக்கு
ஓர்மையுடன் இதுகாலம் வேலோன் தனக்கும்


with greatness the mountain god koodal naadhan (koodal = Madurai)
in continuation to siddhar Sundaranandhan
the time is right for the puja of Ramadevar
with oneness time to worship, the Lord of Spear/Vel (Lord Muruga)

தனக்குரிய திணை உணவும் ஈய நன்மை
தானுரைத்த மன்மதவாம் ஆண்டு இறுதி
ஊனமிலா திருமகளை முப்பெரும் தேவியரை
உன்னதமாய் போற்றுவிதம் திருவிளக்கேற்றி பூசை கொள்வீர்



his favourite food Thinai (Millet) will be good to serve
to say before the end of this tamil year (Manmadha aandu)
the flawless Mahalakshmi the three divine devi (Ambal)
Offer Obeisance through Thiruvilakku pooja (5 faced lamp)


பூசைபலன் மங்கலங்கள் பெரும் பொருட்டு
பிசகில்லா அன்னையர்கள் ரிஷி பத்னிகள்
இசைந்து ஆசிபெரும்பொருட்டு போற்றி செய்வீர்
இக்காலம் சக்தியவள் ஆசி எல்லாம்


The Pooja to obtain all blessings and Mangalam
The great mothers the rishi pathni(s)
To make them happy and get their blessing by adoring
and get the blessing of Shakthi during this period

     அருள்வாக்கின்படி அன்னதானத்துடன் தினைப்பாயாசம் வழங்கினர். பச்சை நிறத்தில் இனிப்பான மருந்தும் வழங்கினர். மேலே அருள் நிலைய வாயில் படத்தில் உள்ள சேரில் கண்ணாடிக் குடுவையில் மருந்துள்ளதைக் காணலாம்.
மாடியில் உள்ள வழிபாட்டுக் கூடம் ஏற ஒரு வழியும் இறங்க ஒரு வழியும் உள்ளது.
     ஒருமுறை குருபூசையில் வாயுமைந்தனாகவும், மற்றொரு முறை கிளியாகவும் வந்து காட்சிக்கொடுத்து பின்னர் அதிசயத்தக்க விதமாக மறைந்துள்ளார்.
     பிருகு மகரிஷி தன்னை ஜோதி வடிவில் வழிபட பணித்துள்ளார். அவ்வகண்ட ஜோதியை சற்று நேரம் உற்றப் பார்த்துப் பின் தியானித்தல் நன்று. இவ்வகண்ட ஜோதியில் இதுவரை ஐக்கியமான சித்தர்கள்:

1. அகத்திய மகரிஷி
2. பிருகு  மகரிஷி
3. நந்தி தேவர்
4. சிவவாக்கியர்
5. சுகப்பிரம்ம மகரிஷி
6. சுந்தரானந்தர்
7. இராமதேவர்
      பிருகு  மகரிஷி ஜீவவாக்கின்படி  நேற்று இராமதேவர் இவ்வகண்ட ஜோதியில் ஆயில்ய-மட்சத்ிரந்தியில்  ஐக்கியாவால் இராமேவுக்கும் சித்தர்களின் குருவாம் திருமுருகப்பெருமாுக்கம், சித்தர்கள் போற்றும் மனோன்மணி என்றும் பாலா திரிபுரசுந்தரி என்றும் ோற்றப்படும் வாலைத் தெய்வத்திற்கும் மிகச் சிறப்பாக பூசை நடந்தது.
ஞான வேல் மற்றும் அகண்ட ஜோதி


     நேற்று  முப்பெரும் தேவியரின் ஆற்றல்களும் இவ்வருள் நிலையத்தில் ஐக்கியமாகியுள்ளது. அவர்களை வரவேற்று மகிழ்விக்கும் விதமாக 51 விளக்கு பூசை ஞாயிறு மக நட்சத்திரத்தில் மாலையில் நந்திகாலமான பிரதோஷ நேரத்தில் 4.30 மணிமுதல் 7மணி வரை நடைப்பெற்றது. அனைத்து பூசைகளும் அழகுத் தமிழில் அமைந்தது.
              
. பிருகு  மகரிஷி, வாலை- பாலா திரிபுரசுந்தரி மற்றும் வேலும் சூலமும்


இத்தலம் மறைமலை நகரை அடுத்து வரும் மல்ரோசாபுரத்திலிருந்து சுமார் 8கி.மீ தொலைவில் மருதேரி பேருந்து நிலையம் மிக அருகே உள்ளது. சொந்த வாஹனத்தில் செல்வது உத்தமம்.
    


Monday, February 22, 2016

கந்தர் அனுபூதி பாடல் mp3 மற்றும் விளக்கம்- KANDHAR ANUBHUTHI MEANING AND MP3

                                                                 ஓம்
       இன்று பன்னிரண்டு  ஆண்டுகட்கு ஒரு முறை வரும் மாசிமகம். இப்புனித நன்னாளில் அருணகிரியார் மெய்ப்பொருளாம் ஆறுமுகனை உய்ந்துணர்ந்து நமக்கு அருளிய கந்தர் அனுபூதியின் மந்திர பாடல்களைக்  காண்போம். மிக அற்புதமாக தாள லயத்துடன் இவர்? பாடும் இப்பாடலைக் கேட்க கேட்க உள்ளத்தில் பாடல் தானாகப் பதிந்து விடும். அவருக்கு  நன்றிகள் பல. பாடியவர் யாரென்று தெரிந்தால் கூறுங்கள்.
பாடலை இங்கேயும் கேட்கலாம்.

பொருள் காண இங்கே செல்லவும்


காப்பு

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உ ருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனைபதம் பணிவாம்

நூல்

ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானை சகோதரனே. (1)

உ ல்லாச நிராகுல, யோக, ிதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே. (2)
 
வானோ? புனல், பார், கனல், மாருதமோ?
ஞானோதயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ பொருளாவது சண்முகனே.(3)

வளைபட்டகை மாதொடு, மக்கள் எனும்
தளைபட்(டு), அழியத் தகுமோ? தகுமோ
கிளைபட்(டு) எழுசூர் உ ரமும் கிரியும்,
தொளைபட்(டு) உ ருவத் தொடு வேலவனே. (4)

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந்து மொழிந்திலனே
அகம், மாயை, மடந்தையர் என்(று), அயரும் 
சக மாயையுள் நின்று தயங்குவதே. (5)

திணியான மனோசிலை மீது, உ னதாள்
அணியார் அரவிந்தம் அரும்பு மதோ
பணி யா? என, வள்ளi பதம் பணியும்
தணியா அதிமோக தயாபரனே. (6)

கெடுவாய் மனனே கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள் படவே
 விடுவாய் விடுவாய் வினை யாவையுமே. (7)

அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட, மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன் 
சமரம் பொரு தானவ நாசகனே. (8)

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டூடற, வேல் சயிலத்(து) எறியும்
நிட்டூர, நிராகுல நிர்ப்பயனே. (9)

கார் மா மிசை காலன் வரின், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே. (10)

கூகா எனஎன் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசலவேலவ நாலுகவித் 
தியாகா சுரலோக சிகாமணியே. (11)

செம்மான் மகளைத் திருடும் திருடன்,
பெம்மான் முருகன், பிறவான், இறவான்,
சும்மா இரு சொல் அற என்றலுமே 
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (12)

முருகன், தனிவேல் முனி, நம் குரு என்று
அருள்கொண்டு அறியார் அறியும் தரமோ?
உ ரு அன்று, அரு அன்று, உ ளது அன்று, இலது அன்று, 
இருள் அன்று, ஒளi அன்று, என நின்றதுவே. (13)

கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்(று)
உ ய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய்,
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம் 
ஐவாய் வழி செல்லும் அவாவினையே. (14)

முருகன், குமரன், குகன் என்று மொழிந்து,
உ ருகும் செயல் தந்து உ ணர்வு என்(று) அருள்வாய்?
பொரு புங்கவரும், புவியும் பரவும் 
குருபுங் கவ எண் குண பஞ்சரனே. (15)

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு,
ஓரா வினையேன் உ ழலத் தகுமோ?
வீரா முதுசூர் பட, வேல் எறியும் 
சூரா சுரலோக துரந்தரனே. (16)

யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்,
தாமே பெற, வேலவர் தந்ததனால்,
பூமேல் மயல்போய், அறமெய்ப் புணர்வீர் 
நாமேல், நடவீர் நடவீர் இனியே. (17)

உ தியா, மரியா, உ ணரா, மறவா,
விதிமால் அறியா விமலன் புதல்வா
அதிகா அநகா அபயா அமரா
பதி காவல சூர பயங்கரனே. (18)

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோகியவா
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே
மிடி என்று ஒரு பாவி வெளiப் படினே. (19)

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உ ரிதா உ பதேசம் உ ணர்த்தியவா
விரிதாரண விக்கிரம வேள் இமையோர் 
புரிதாரக நாக புரந்தரனே. (20)

கருதா மறவா நெறிகாண, எனக்கு 
இருதாள் வனசம் தர என்று இசைவாய்?
வரதா முருகா மயில் வாகனனே 
விரதா சுர சூர விபாடணனே. (21)

காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளi பதம் பணியும் 
வேளைச் சுர பூபதி, மேருவையே. (22)

அடியைக் குறியாது, அறியாமையினால் 
முடியக் கெடவோ? முறையோ முறையோ,
வடி விக்ரம வேல் மகிபா குறமின் 
கொடியைப் புணரும் குண பூதரனே. (23)

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ
சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும் 
போர் வேல புரந்தர பூபதியே. (24)

மெய்யே என வெவ்வினை வாழ்வை உ கந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ, முழுதும் 
செய்யோய் மயிலேறிய சேவகனே. (25)

ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான வினோத மனோ
 தீதா சுரலோக சிகாமணியே. (26)

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்,
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே மணியே பொருளே அருளே
 மன்னே மயிலேறிய வானவனே. (27)

ஆனா அமுதே அயில்வேல் அரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும் 
தானாய் நிலை நின்றது, தற்பரமே. (28)

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என் 
சொல்லே புனையுஞ் சுடர் வேலவனே. (29)

செவ்வான் உ ருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உ ணர்வித் ததுதான்,
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே? (30)

பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
வீழ்வாய் என, என்னை விதித்தனையே 
தாழ்வானவை செய்தன தாம் உ ளவோ?
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே. (31)

கலையே பதறிக், கதறித், தலையூடு
அலையே படுமாறு, அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர் குலப் பிடிதோய்
மலையே மலை கூறிடு வாகையனே. (32)

சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும் 
விந்தாடவி, என்று விடப் பெறுவேன்?
மந்தாகினி தந்த வரோதயனே 
கந்தா முருகா கருணாகரனே. (33)

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல், எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல சண்முகனே 
கங்காநதி பால க்ருபாகரனே. (34)

விதிகாணும் உ டம்பை விடா வினையேன்,
 கதிகாண, மலர்கழல் என்று அருள்வாய்?
மதிவாள் நுதல் வள்ளiயை அல்லது, பின்
துதியா விரதா சுரபூ பதியே. (35)

நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்?
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் 
பாதா குறமின் பத சேகரனே. (36)

கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவால் 
அரிவாய், அடியோடும் அகந்தையையே. (37)

ஆதாளiயை, ஒன்று அறியேனை, அறத்
தீது ஆளiயை, ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கு இறைவா 
வேதாள கணம் புகழ் வேலவனே. (38)

மாஏழ் ஜனனம் கெட, மாயை விடா
மூஏடணை என்று முடிந்திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும் 
தேவே சிவசங்கர தேசிகனே. (39)

வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி, மயங்கிடவோ?
சுனையோடு, அருவிற் றுறையோடு, பசுந்
தினையோடு இதணோடு திரிந்தவனே. (40)

சாகாது, எனையே சரணங்களiலே
கா, கா நமனார் கலகம் செயும்நாள்
வாகா முருகா மயில் வாகனனே
 யோகா சிவஞான உ பதேசிகனே. (41)

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத், தனிவேலை நிகழ்த்திடலும்,
செறிவு அற்று, உ லகோ(டு) உ ரை சிந்தையும் அற்று, 
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே. (42) 

தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்,
ஆசா நிகளம் துகளாயின பின், 
பேசா அநுபூதி பிறந்ததுவே. (43)

சாடும் தனிவேல் முருகன் சரணம்,
சூடும்படி தந்தது சொல்லுமதோ?
வீடும், சுரர் மாமுடி, வேதமும் வெம் 
காடும், புனலும் கமழும் கழலே. (44)

கரவாகிய கல்வி உ ளார் கடைசென்று 
இரவா வகை, மெய்ப்பொருள் ஈகுவையோ?
குரவா குமரா குலிசாயுத குஞ்சரவா சிவயோக தயாபரனே. (45)

எந்தாயும், எனக்கு அருள் தந்தையும் நீ,
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்,
கந்தா கதிர்வேலவனே உ மையாள் 
மைந்தா குமரா மறை நாயகனே. (46)

ஆறு ஆறையும் நீத்து, அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன், பெறுமாறு உ ளதோ
சீறா வருசூர் சிதைவித்து, இமையோர்
 கூறா உ லகம் குளiர்வித் தவனே. (47)

அறிவு ஒன்று அறநின்று, அறிவார் அறிவில்
பிரிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
செறிவு ஒன்று அற வந்து இருளே சிதைய,
வெறி வென்ற வரோ(டு) உ றும் வேலவனே (48)

தன்னந் தனி நின்றது, தான் அறிய
 இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார் 
கின்னம் களையும் கிருபை சூழ் சுடரே. (49)

மதி கெட்டு, அறவாடி, மயங்கி, அறக்
கதி கெட்டு அவமே கெடவோ கடவேன்?
நதி புத்திர ஞான சுகாதிப அத்திதி 
புத்திரர் வீறு அடு சேவகனே. (50)

உ ருவாய் அருவாய், உ ளதாய் இலதாய்,

மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்,

கருவாய் உ யிராய்க், கதியாய், விதியாய்க்,

குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. (51) 

                                                                 நன்றி:kantharanupoothy.blogspot.com

பதிவு பெரிதானதால் விளக்கத்தை இங்கே பார்க்கவும்!