ஓம்
POOJA FOR RAMADEVAR AND MUPPERUM DEVIYAR AT BRIGHU MAHARISHI ARULNILAYAM, MARUDERI
நேற்று பங்குனி 7ம் தேதி வளர்பிறை பிரதோஷம், மருதேரி பிருகு மகரிஷி அருள் நிலையத்தில் நடைபெற்ற இராமதேவர் பூசை மற்றும் விளக்கு பூசையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. குடிலின் மஹிமை, சித்தர்களின் வரவு பற்றியும் பிருகு மகரிஷி சன்மார்க்க சங்கத்தவரான திரு. சீனிவாசன் அவர்கள் அருமையாக விளக்கினார். மும்மூர்த்திகளின் ஆசி பெற்ற பின்னரே ஒரு தலம் சித்தர்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கும் தகுதி பெறும் என்றார். சித்தர்கள் ஒவ்வொருவராக ஐக்கியமாகும் இப்புண்ணிய தலத்தின் பெருமையை மேலும் அருமையாக விளக்கினார். அதைக் கேட்க கேட்க மிகுந்த பரவசம் அடைந்தோம். அதே பரவச உணர்வுடன் சித்தர்களின் ஆசியுடனும் இத்தலப் பெருமைகளை பகர்கின்றேன்.
இவ்விடத்தில் இருக்கும் அகோர வீரபத்திரர் இத்தலம் பிருகு மகரிஷி திருப்பாதம் பட்ட தலம் எனவும் அவர் இங்கு வீற்றிருந்து அருள்பாலிப்பார் என வாக்குரைத்துள்ளார். பின்னர் திருவொற்றியூர் ஸ்ரீ பிருகு மகரிஷி நாடி நிலைய அருள்வாக்கில், பிருகு மகரிஷி இத்தலத்தில் எவை எவை எப்படி அமைய வேண்டும் எனக் கணித்துக் கொடுத்துள்ளார். அவ்வாறு அமையப் பெற்ற அத்தல சிறப்புகளை இப்படங்கள் விளக்கும்.
அருள் நிலைய தலைவாசலில் நுழைந்தவுடன் நேராக, சற்றுத் தொலைவில், ஒரு கிணறு. அருகிலேயே பல நூறடி போர் போட்டு நீர் எடுக்கின்றனர். ஆனால் பிருகு மகரிஷி குறிப்பிட்ட இடத்தில் கிணறு
நேற்று பிருகு மகரிஷி அருள்வாக்கின்படி, வரும் ஆண்-பெண் பக்தர்களை சிவ-சக்தியாகக் கருதி, பாதங்களை நந்தியாகக் கருதி மஞ்சள் நீரால் பிருகு மகரிஷி சன்மார்க்கத்தினர் பாதபூசை செய்த பின்னர் பூசைக்கு அனுப்பினர். இப்பூசை பற்றி வந்த அருள்வாக்கு:
பிருகு மகரிஷியின் சீவ வாக்கு
நிச்சயித்த ஆயில்ய மகத்தின் சந்தி
To attain the blessings of Siddha per principles
in the month of panguni on first sunday (20th March)
as destined in the time when ayilyam and Magam starmeets
மகத்துவமாய் மலைகடவுள் கூடல் நாதன் மொழிந்த விதம் சுந்தரானந்தன் தொடர்ச்சியாக
உகந்ததொரு பூசைவிழா இராமதேவருக்கு
ஓர்மையுடன் இதுகாலம் வேலோன் தனக்கும்
with greatness the mountain god koodal naadhan (koodal = Madurai)
in continuation to siddhar Sundaranandhan
the time is right for the puja of Ramadevar
with oneness time to worship, the Lord of Spear/Vel (Lord Muruga)
தனக்குரிய திணை உணவும் ஈய நன்மை
தானுரைத்த மன்மதவாம் ஆண்டு இறுதி
ஊனமிலா திருமகளை முப்பெரும் தேவியரை
உன்னதமாய் போற்றுவிதம் திருவிளக்கேற்றி பூசை கொள்வீர்
இசைந்து ஆசிபெரும்பொருட்டு போற்றி செய்வீர்
இக்காலம் சக்தியவள் ஆசி எல்லாம்
The Pooja to obtain all blessings and Mangalam
The great mothers the rishi pathni(s)
To make them happy and get their blessing by adoring
and get the blessing of Shakthi during this period
அருள்வாக்கின்படி அன்னதானத்துடன் தினைப்பாயாசம் வழங்கினர். பச்சை நிறத்தில் இனிப்பான மருந்தும் வழங்கினர். மேலே அருள் நிலைய வாயில் படத்தில் உள்ள சேரில் கண்ணாடிக் குடுவையில் மருந்துள்ளதைக் காணலாம்.
மாடியில் உள்ள வழிபாட்டுக் கூடம் ஏற ஒரு வழியும் இறங்க ஒரு வழியும் உள்ளது.
ஒருமுறை குருபூசையில் வாயுமைந்தனாகவும், மற்றொரு முறை கிளியாகவும் வந்து காட்சிக்கொடுத்து பின்னர் அதிசயத்தக்க விதமாக மறைந்துள்ளார்.
பிருகு மகரிஷி தன்னை ஜோதி வடிவில் வழிபட பணித்துள்ளார். அவ்வகண்ட ஜோதியை சற்று நேரம் உற்றப் பார்த்துப் பின் தியானித்தல் நன்று. இவ்வகண்ட ஜோதியில் இதுவரை ஐக்கியமான சித்தர்கள்:
1. அகத்திய மகரிஷி
2. பிருகு மகரிஷி
3. நந்தி தேவர்
4. சிவவாக்கியர்
5. சுகப்பிரம்ம மகரிஷி
6. சுந்தரானந்தர்
7. இராமதேவர்
நேற்று முப்பெரும் தேவியரின் ஆற்றல்களும் இவ்வருள் நிலையத்தில் ஐக்கியமாகியுள்ளது. அவர்களை வரவேற்று மகிழ்விக்கும் விதமாக 51 விளக்கு பூசை ஞாயிறு மக நட்சத்திரத்தில் மாலையில் நந்திகாலமான பிரதோஷ நேரத்தில் 4.30 மணிமுதல் 7மணி வரை நடைப்பெற்றது. அனைத்து பூசைகளும் அழகுத் தமிழில் அமைந்தது.
இத்தலம் மறைமலை நகரை அடுத்து வரும் மல்ரோசாபுரத்திலிருந்து சுமார் 8கி.மீ தொலைவில் மருதேரி பேருந்து நிலையம் மிக அருகே உள்ளது. சொந்த வாஹனத்தில் செல்வது உத்தமம்.
POOJA FOR RAMADEVAR AND MUPPERUM DEVIYAR AT BRIGHU MAHARISHI ARULNILAYAM, MARUDERI
நேற்று பங்குனி 7ம் தேதி வளர்பிறை பிரதோஷம், மருதேரி பிருகு மகரிஷி அருள் நிலையத்தில் நடைபெற்ற இராமதேவர் பூசை மற்றும் விளக்கு பூசையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. குடிலின் மஹிமை, சித்தர்களின் வரவு பற்றியும் பிருகு மகரிஷி சன்மார்க்க சங்கத்தவரான திரு. சீனிவாசன் அவர்கள் அருமையாக விளக்கினார். மும்மூர்த்திகளின் ஆசி பெற்ற பின்னரே ஒரு தலம் சித்தர்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கும் தகுதி பெறும் என்றார். சித்தர்கள் ஒவ்வொருவராக ஐக்கியமாகும் இப்புண்ணிய தலத்தின் பெருமையை மேலும் அருமையாக விளக்கினார். அதைக் கேட்க கேட்க மிகுந்த பரவசம் அடைந்தோம். அதே பரவச உணர்வுடன் சித்தர்களின் ஆசியுடனும் இத்தலப் பெருமைகளை பகர்கின்றேன்.
இவ்விடத்தில் இருக்கும் அகோர வீரபத்திரர் இத்தலம் பிருகு மகரிஷி திருப்பாதம் பட்ட தலம் எனவும் அவர் இங்கு வீற்றிருந்து அருள்பாலிப்பார் என வாக்குரைத்துள்ளார். பின்னர் திருவொற்றியூர் ஸ்ரீ பிருகு மகரிஷி நாடி நிலைய அருள்வாக்கில், பிருகு மகரிஷி இத்தலத்தில் எவை எவை எப்படி அமைய வேண்டும் எனக் கணித்துக் கொடுத்துள்ளார். அவ்வாறு அமையப் பெற்ற அத்தல சிறப்புகளை இப்படங்கள் விளக்கும்.
அருள் நிலைய தலைவாசலில் நுழைந்தவுடன் நேராக, சற்றுத் தொலைவில், ஒரு கிணறு. அருகிலேயே பல நூறடி போர் போட்டு நீர் எடுக்கின்றனர். ஆனால் பிருகு மகரிஷி குறிப்பிட்ட இடத்தில் கிணறு
தோண்டியதால் சில அடிகளிலே நீர் ஊற்றெடுத்தது. அருள்வாக்கின்படி கிணற்றின் வலப்புறத்தில் நந்தி தேவரும் மறுபுறத்தில் அன்னைக் காமதேனுவும் அமைத்துள்ளார்கள். இங்கு வரும் அனைவரும் முதலில் இக்கிணற்று நீரில் கை, கால்கள், முகம், கழுத்து கழுவி பின்னர் நந்தி தேவரையும் காமதேனுவையும் வழிபட்டு பின்னர் அருள் நிலையம் செல்ல வேண்டும்.
கிணற்றருகிலிருந்து எடுத்த அருள் நிலையப் படம் |
4 அழகியத் தூண்களுடன் அருள் நிலைய வாயில் |
பிருகு மகரிஷியின் சீவ வாக்கு
தான்முறையே சித்தர்கள் ஆசி வேண்டி
நுட்பமாய் கயல்திங்கள் ஆதி வாரம் நிச்சயித்த ஆயில்ய மகத்தின் சந்தி
To attain the blessings of Siddha per principles
in the month of panguni on first sunday (20th March)
as destined in the time when ayilyam and Magam starmeets
மகத்துவமாய் மலைகடவுள் கூடல் நாதன் மொழிந்த விதம் சுந்தரானந்தன் தொடர்ச்சியாக
உகந்ததொரு பூசைவிழா இராமதேவருக்கு
ஓர்மையுடன் இதுகாலம் வேலோன் தனக்கும்
with greatness the mountain god koodal naadhan (koodal = Madurai)
in continuation to siddhar Sundaranandhan
the time is right for the puja of Ramadevar
with oneness time to worship, the Lord of Spear/Vel (Lord Muruga)
தனக்குரிய திணை உணவும் ஈய நன்மை
தானுரைத்த மன்மதவாம் ஆண்டு இறுதி
ஊனமிலா திருமகளை முப்பெரும் தேவியரை
உன்னதமாய் போற்றுவிதம் திருவிளக்கேற்றி பூசை கொள்வீர்
his favourite food Thinai (Millet) will be good to serve
to say before the end of this tamil year (Manmadha aandu)
the flawless Mahalakshmi the three divine devi (Ambal)
Offer Obeisance through Thiruvilakku pooja (5 faced lamp)
பூசைபலன் மங்கலங்கள் பெரும் பொருட்டு
பிசகில்லா அன்னையர்கள் ரிஷி பத்னிகள் இசைந்து ஆசிபெரும்பொருட்டு போற்றி செய்வீர்
இக்காலம் சக்தியவள் ஆசி எல்லாம்
The Pooja to obtain all blessings and Mangalam
The great mothers the rishi pathni(s)
To make them happy and get their blessing by adoring
and get the blessing of Shakthi during this period
அருள்வாக்கின்படி அன்னதானத்துடன் தினைப்பாயாசம் வழங்கினர். பச்சை நிறத்தில் இனிப்பான மருந்தும் வழங்கினர். மேலே அருள் நிலைய வாயில் படத்தில் உள்ள சேரில் கண்ணாடிக் குடுவையில் மருந்துள்ளதைக் காணலாம்.
மாடியில் உள்ள வழிபாட்டுக் கூடம் ஏற ஒரு வழியும் இறங்க ஒரு வழியும் உள்ளது.
ஒருமுறை குருபூசையில் வாயுமைந்தனாகவும், மற்றொரு முறை கிளியாகவும் வந்து காட்சிக்கொடுத்து பின்னர் அதிசயத்தக்க விதமாக மறைந்துள்ளார்.
பிருகு மகரிஷி தன்னை ஜோதி வடிவில் வழிபட பணித்துள்ளார். அவ்வகண்ட ஜோதியை சற்று நேரம் உற்றப் பார்த்துப் பின் தியானித்தல் நன்று. இவ்வகண்ட ஜோதியில் இதுவரை ஐக்கியமான சித்தர்கள்:
1. அகத்திய மகரிஷி
2. பிருகு மகரிஷி
3. நந்தி தேவர்
4. சிவவாக்கியர்
5. சுகப்பிரம்ம மகரிஷி
6. சுந்தரானந்தர்
7. இராமதேவர்
பிருகு மகரிஷி ஜீவவாக்கின்படி நேற்று இராமதேவர் இவ்வகண்ட ஜோதியில் ஆயில்ய-மக நட்சத்திர சந்தியில் ஐக்கியமாவதால் இராமதேவருக்கும் சித்தர்களின் குருவாம் திருமுருகப்பெருமானுக்கும், சித்தர்கள் போற்றும் மனோன்மணி என்றும் பாலா திரிபுரசுந்தரி என்றும் போற்றப்படும் வாலைத் தெய்வத்திற்கும் மிகச் சிறப்பாக பூசை நடந்தது.
ஞான வேல் மற்றும் அகண்ட ஜோதி |
. பிருகு மகரிஷி, வாலை- பாலா திரிபுரசுந்தரி மற்றும் வேலும் சூலமும் |
இத்தலம் மறைமலை நகரை அடுத்து வரும் மல்ரோசாபுரத்திலிருந்து சுமார் 8கி.மீ தொலைவில் மருதேரி பேருந்து நிலையம் மிக அருகே உள்ளது. சொந்த வாஹனத்தில் செல்வது உத்தமம்.
Wants to go bhirugu maharishi Arul nilayam after reading ur post great job
ReplyDeleteஅவசியம் சென்று மகரிஷிகளின் அருள் பெற்று வாருங்கள் இந்திரா அவர்களே!
Delete