ஓம்
தைத்திங்கள் முதல்நாளாம் இன்று சோதியான முருகப்பெருமானை எங்கும் எவ்விடத்தும் எப்பொழுதும் காணும் ஒரு எளிய இனிய பாடலைக் காண்போம்.
எங்கே கண்டாய் முருகனை?
எங்கே கண்டாய் எங்கே கண்டாய்
எங்கள் முருகனை எங்கே கண்டாய்
அந்த இமயபுரியிலே உமையவளோடு
இடப்புறமாக ஆடக்கண்டேன் - எங்கே
அந்தக் கார்த்திகைப் பெண்களிடம் கந்த வடிவேலனும்
கார்த்திகைப் பாலனாக ஆடக்கண்டேன் -எங்கே
அந்த ஆவினன்குடியிலே அவ்வைப் பாட்டியுடனே
ஆனந்தத் தமிழாக ஆடக்கண்டேன் -எங்கே
அந்த சுவாமிமலை தன்னிலே சுந்தரேசனுடனே
வேதப் பொருளாக ஆடக் கண்டேன் -எங்கே
அந்தச் செந்தூர்தனிலே செம்மணல் மேட்டிலே
சூரசம்ஹாரமாக ஆடக்கண்டேன் -எங்கே
அந்தப் பரங்குன்றம்தனிலே தெய்வயானையுடனே
திருமணக்கோலம் கொண்டாடக் கண்டேன்- எங்கே
அந்தத் தணிகைமலை மீதினிலே காவடிகளுடனே
சினம் தணிந்து விளையாடக்கண்டேன் -எங்கே
அந்தச் சோலைமலை மீதினிலே வள்ளி தெய்வானையுடன்
கோல மயிலேறி ஆடக் கண்டேன் -எங்கே
திருத்தங்கல் மலைதனிலே ஆறுமுகத்தம்பிரானால்
பழனிமலை பாலனாக ஆடக் கண்டேன் -எங்கே
எங்கும் கண்டோம் எங்கும் கண்டோம்
எங்கள் முருகனை எங்கும் கண்டோம்.
தைத்திங்கள் முதல்நாளாம் இன்று சோதியான முருகப்பெருமானை எங்கும் எவ்விடத்தும் எப்பொழுதும் காணும் ஒரு எளிய இனிய பாடலைக் காண்போம்.
எங்கே கண்டாய் முருகனை?
எங்கே கண்டாய் எங்கே கண்டாய்
எங்கள் முருகனை எங்கே கண்டாய்
அந்த இமயபுரியிலே உமையவளோடு
இடப்புறமாக ஆடக்கண்டேன் - எங்கே
அந்தக் கார்த்திகைப் பெண்களிடம் கந்த வடிவேலனும்
கார்த்திகைப் பாலனாக ஆடக்கண்டேன் -எங்கே
அந்த ஆவினன்குடியிலே அவ்வைப் பாட்டியுடனே
ஆனந்தத் தமிழாக ஆடக்கண்டேன் -எங்கே
அந்த சுவாமிமலை தன்னிலே சுந்தரேசனுடனே
வேதப் பொருளாக ஆடக் கண்டேன் -எங்கே
அந்தச் செந்தூர்தனிலே செம்மணல் மேட்டிலே
சூரசம்ஹாரமாக ஆடக்கண்டேன் -எங்கே
அந்தப் பரங்குன்றம்தனிலே தெய்வயானையுடனே
திருமணக்கோலம் கொண்டாடக் கண்டேன்- எங்கே
அந்தத் தணிகைமலை மீதினிலே காவடிகளுடனே
சினம் தணிந்து விளையாடக்கண்டேன் -எங்கே
அந்தச் சோலைமலை மீதினிலே வள்ளி தெய்வானையுடன்
கோல மயிலேறி ஆடக் கண்டேன் -எங்கே
திருத்தங்கல் மலைதனிலே ஆறுமுகத்தம்பிரானால்
பழனிமலை பாலனாக ஆடக் கண்டேன் -எங்கே
எங்கும் கண்டோம் எங்கும் கண்டோம்
எங்கள் முருகனை எங்கும் கண்டோம்.
No comments:
Post a Comment