Moving Image
Showing posts with label பொன் உடல். Show all posts
Showing posts with label பொன் உடல். Show all posts

Friday, February 15, 2019

பொன்னும் பொன் போன்ற தேகம் பெற தங்க ஆனந்தக் களிப்பு

                            தங்க ஆனந்தக் களிப்பு 


       ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய தங்க ஆனந்த களிப்பு  அவரது பாடல் தொகுப்பில் 6ம் மண்டலத்தில் அமைந்துள்ளது.  இம்மை, மறுமை வறுமையை போக்கி அருட் செல்வத்தினையும் பொருட் செல்வத்தினையும் பெற சிவ சுப்ரமணியனின் பால் இயற்றப்பட்ட தங்கமயமான துதி ஆகும். இது 10 பாடல்களை உடையது.  கர்மவினைகளை அழித்து செய் தொழிலில்  லாபத்தினை அளிக்கக்கூடியதாகும். மனதிற்கு அமைதியைத் தர வல்லது.  மனம் கடந்த அந்த அன்பின் ஊற்றாம் திருமுருகனைப் போன்ற பொன் தேகத்தினை, பிரணவ தேகத்தினை,  நிழல் விழா தேகத்தினைத் தரவல்லது.  SOUNDCLOUD LINK

இனி பாடல்....


சுயமான தங்கம் இத்தங்கம்  - சிவ
சுப்பிரமணியம் எனும் தெய்வத் தங்கம்

அந்தரர் வேண்டொரு தங்கம் -  ஈறில்
அருசிகரக்கிரி நின்றெழு தங்கம்
சுந்தரமாய்ச் சுடர் தங்கம்  - உமை
துங்க மலர்க் கரந் தங்கொரு தங்கம்             1

வேதத்திலே உள்ளத் தங்கம் -  சுத்த
வித்தை சொல் ஆகம நித்தியத் தங்கம்
நாதத்தின் மேலுள்ளத் தங்கம்  - அந்த
நாதம் கடந்தபின் நாம் அடை தங்கம்            2

பார்ப்பவர்க் கின்புசெய் தங்கம்  - சிவ
பாக்கியமெலாம் பகுக்கின்ற தங்கம்
சீர் பரதத்துவத் தங்கம்  -  நிறை
சிற்பர தேஜோமய ஆனந்தத் தங்கம்              3

நினைப்பவர்க் கின்பு செய்த் தங்கம் -  தொண்டர்
நெஞ்செனும் பேழையிலே நிறை தங்கம்
வினைப் பவம்வெல் பசுந் தங்கம்   - ஞான
விளைவற்ற பூமியில் புதைபட்ட தங்கம்      4

வாதிகட்கு எட்டாத தங்கம்   -  அன்பு
வறண்டலைவோர் அறியா வருந்தங்கம்
தீதிகற் சூழ்களை தங்கம்  -  தவச்
செல்வர்க்கு செல்வமதாந் திருத் தங்கம்              5

அஞ்செனத் தெட்டாதத் தங்கம்   -  பத்தி
யஞ்செனத் தேயெட்டும் அற்புதத் தங்கம்
செஞ்செயத் தைத்தரு தங்கம்     -  சிவ
சித்தர்கள் யோகிகள் மெச்சிடு தங்கம்                   6

மாற்றில் உயர்ந்தொளிர் தங்கம்  -  எல்லா
மங்கும் படிக்கருள் செய்தனித் தங்கம் 
ஆற்றலின் மேம்படு தங்கம்          -   பகி
ரண்டமெல்லாம் விலை கொண்டுயர் தங்கம்    7

அளவைக் கடங்காத தங்கம் - தினம்
அனலிட் டுருக்கினும் உருகாத தங்கம்
களவுக் கிணங்காத தங்கம்   -  தன்னைக்
காமுறுவார் மிடிதீர்க்கின்ற தங்கம்                        8 

யாதனையைத் தெரு தங்கம்    -   தெய்வ
யானை விழிக்கிதமாய் அவிர் தங்கம்
ஏதனையா  நறுந் தங்கம்  எழில்
ஏனலினோர் கொடிதான் படர் தங்கம்                   9


ஞான விண்ணாகின்ற தங்கம்   -  நல
நல்குந்திருப்புக ழோன் கண்ட தங்கம்
வானவர் மாமுடித் தங்கம்          -  நம்மை
வாழ்விக்க வந்த பராபரத்   தங்கம்                         10


பொருள்;    ஏனலினோர் *   தினைப்புனம் ( தினை விளையும் மலை) காப்போர்