ஆறுமுகத்தம்பிரான் பற்றி அறிய!

Thursday, February 11, 2016

ஆறுமுகத்தம்பிரான் நினைவு கல்தூண்

ஓம்

       ஆறுமுகத்தம்பிரான் புனித சரிதத்தை படித்தவர்கள் அப்பெருமகனாருக்கு திருத்தங்கல் ஊர் மக்கள் தம் பிழை பொறுக்க வேண்டி அவர் சமாதி வைக்க வேண்டிய இடத்தில் அதாவது பழனியாண்டவர் கோவில் எதிரே கல்தூண் கட்டியது பற்றி அறிந்திருப்பர். அறியாதோர் தம்பிரான் சரிதம் அறிய இங்கே அழுத்தவும்.


கருநெல்லி நாதர் மற்றும் பழனியாண்டவர் கோவில் வாயில்
    முப்பது ஆண்டுகளுக்கு முன் கோவில் வாயில் எதிரே சாலையின் ஓரம் சிறு குன்று இருந்தது. அதன் மீதுள்ள தம்பிரான் நினைவு கல்தூணில் தினமும் ஊர் மக்களில் ஒருவர் தீபமேற்றுவர். தற்பொழுது இப்பகுதி கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, கல்தூண் ஒரு கடைக்குள் உள்ளது. தூண் எப்படி சிறியதாயிற்று என விளங்கவில்லை.


ஆனாலும் அக்கடைக்காரர் தினமும் இக்கல்தூணில் தீபமேற்றி வழிபடுகிறார் என்பது ஒரு ஆறுதல்.
                       ஆறுமுகத்தம்பிரானே போற்றி! போற்றி! போற்றி!!

No comments:

Post a Comment