ஆறுமுகத்தம்பிரான் பற்றி அறிய!

Wednesday, January 27, 2016

சித்தர் ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரான் 108 போற்றி துதி

                                                          ஓம்
    

ஆறுமுகத்தம்பிரான்  திருவடிகள் சரணம்! சரணம்!


1.   ஓம்  அருள்நிறை  சித்தரே        போற்றி!
2.   ஓம்  ஆறுமுகத்தம்பிரானே     போற்றி!
3.   ஓம்  இறையருட் செல்வரே     போற்றி!
4.   ஓம்  ஈடில்லா குருவே                போற்றி!
5.   ஓம்  உண்மை வடிவே                போற்றி!
6.   ஓம்  ஊழ்வினை அறுப்பவரே போற்றி!
7.   ஓம்  எளிமையின் உருவே        போற்றி!
8.   ஓம்  ஏழைப்பங்காளரே              போற்றி!
9.   ஓம்  ஐயனின் தோன்றலே        போற்றி!
10. ஓம்  ஒளிமயமானவரே              போற்றி!   
11.  ஓம் ஓதுவார்க்கு அருள்பவரேபோற்றி!
12.  ஓம் ஒளஷத நாயகரே                போற்றி! 
13. ஓம்  அய்யனே                                  போற்றி!
14. ஓம்  அற்புதமானவரே                 போற்றி!
15. ஓம்  அன்புவடிவானவரே          போற்றி!   
16. ஓம்  அபயம் அளிப்பவரே          போற்றி!
17. ஓம்  அச்சம் தவிர்ப்பவரே          போற்றி!
18. ஓம்  அகந்தை அழிப்பவரே       போற்றி!
19. ஓம்  அல்லல் அறுப்பவரே        போற்றி!
20. ஓம்  அளப்பிற்கரியவரே            போற்றி!
21. ஓம்  அனுக்கிரக நாயகரே         போற்றி!
22. ஓம் அறம் வளர்க்கும் அய்யாவே போற்றி!
23. ஓம் அருமறையின் தோன்றலே    போற்றி!
24. ஓம்  அருந்தவ நாயகரே                    போற்றி!
25. ஓம்  அன்பர் பிணிமருந்தே              போற்றி!
26. ஓம்  அன்னதானத்தில் திகழ்பவரே போற்றி!
27. ஓம்  ஆன்மீகச்சுடரே                            போற்றி!
28. ஓம்  ஆனந்த உருவே                           போற்றி!
29.  ஓம் ஆவினங்குடி பிரியரே              போற்றி!
30. ஓம் ஆண்டவனின் தொண்டரே     போற்றி!
31.  ஓம் ஆறுமுகன் அடியவரே             போற்றி!
32. ஓம்  ஆனந்த ரூபரே                              போற்றி!
33.  ஓம் ஆனந்தம் தருபவரே                  போற்றி!
34. ஓம்  ஆராமுதே                                       போற்றி!
35. ஓம் ஆயிரம் பூசைக்கு உரியவரே போற்றி!
36. ஓம்  கருணைக்கடலே                        போற்றி!
37. ஓம்  கம்பீரத் தோற்றமே                    போற்றி!
38. ஓம்  கற்பகத்தருவே                             போற்றி!
39.  ஓம் கதிரொளிச்சுடரே                        போற்றி!
40. ஓம்  கந்தனைக் கண்டவரே             போற்றி!   
41. ஓம்  கள்வர்களைத் திருத்தியவரே போற்றி!
42. ஓம் கலக்கம் தீர்ப்பவரே                     போற்றி!
43. ஓம் கரைசேர்ப்பவரே                           போற்றி!
44. ஓம் கண்பார்வை தந்தவரே              போற்றி!
45. ஓம் காட்சிக்கு இனியவரே                போற்றி!
46. ஓம் காருண்யம் கொண்டவரே      போற்றி!  
47. ஓம் காலம் வென்றவறே                   போற்றி!
48. ஓம் காவடிச் சிந்து பிரியரே             போற்றி!
49. ஓம் காவடியைக் கொண்டாடுபவரே போற்றி
50. ஓம் காவடியப்பன் ஆனவரே          போற்றி!
51. ஓம் கிருபாநிதியே                                போற்றி!
52.  ஓம் கிரிராச பக்தரே                            போற்றி!   
53.  ஓம் கீர்த்தி தருபவரே                         போற்றி! 
54.  ஓம் குணாநிதியே                                போற்றி! 
55.  ஓம் குற்றம் பொறுப்பவரே              போற்றி!
56.  ஓம் குறைகள் தீர்ப்பவரே                 போற்றி!
57.  ஓம் குன்றினில் ஆலயம் தந்தவரே போற்றி!
58.  ஓம் குகனைத் தங்க வைத்தவரேபோற்றி!
59.  ஓம் குமரனின் சக்தியே                     போற்றி!
60. ஓம் குருபரரின் சீடரே                          போற்றி!   
61. ஓம் குருமகான் ஆனவரே                 போற்றி!
62. ஓம் குருபூசை ஏற்பவரே                    போற்றி!
63. ஓம் குலம் காக்கும் தெய்வமே       போற்றி!
64. ஓம் குலம் தழைக்கச் செய்பவரே போற்றி!
65. ஓம் சண்முகப்பிரியரே                       போற்றி!
66. ஓம் சந்தானம் அளிப்பவரே             போற்றி!   
67. ஓம் சங்கடம் தீர்ப்பவரே                    போற்றி! 
68. ஓம் சச்சிதானந்த ரூபரே                    போற்றி! 
69. ஓம் சரவணப்பிரியரே                         போற்றி!
70. ஓம் சன்மார்க்கத் திலகமே               போற்றி!
71. ஓம் சாந்த சொரூபியே                        போற்றி!
72. ஓம் சான்றோன் ஆக்குபவரே          போற்றி!
73. ஓம் சித்தர் பெருமானே                       போற்றி!
74. ஓம் சித்தம் கவர்ந்தவரே                   போற்றி!    
75. ஓம் சித்தர் குருவே                                போற்றி! 
76. ஓம் சுந்தர வடிவே                                 போற்றி!
77. ஓம் சுகமளிப்பவரே                              போற்றி!
78. ஓம் சுடராய்த் திகழ்பவரே                போற்றி!
79. ஓம் ஞாலம் காப்பவரே                      போற்றி!   
80. ஓம் ஞானப்பிழம்பே                            போற்றி! 
81. ஓம் ஞான உபதேசியே                       போற்றி! 
82. ஓம் தங்கைக்கு இறையருள் தந்தவரே போற்றி!
83  ஓம் தந்தை குலதெய்வமே              போற்றி!
84. ஓம் தண்டாயுதன் செல்வரே          போற்றி!
85. ஓம் திருவுருவே                                    போற்றி!
86. ஓம் திருவருளே                                    போற்றி!
87. ஓம் திருத்தங்களில் பிறந்தவரே போற்றி!   
88. ஓம் திசையெல்லாம் புரந்தவரே போற்றி!
89. ஓம் திரநீறாய்த் திகழ்பவரே        போற்றி!
90. ஓம் திருமூலர் தோன்றலே            போற்றி!
91. ஓம் தீபத்திருவே                                  போற்றி!
92. ஓம் துயர் துடைப்பவரே                   போற்றி!   
93. ஓம் துதிப்போரைக் காப்பவரே    போற்றி! 
94. ஓம் துணையாய் வருபவரே         போற்றி! 
95. ஓம் பகை ஒழிப்பவரே                     போற்றி!
96. ஓம் பழனியம்பதி அடியவரே       போற்றி!
97. ஓம் பன்னிருகையன் பக்தரே       போற்றி!
98. ஓம் பசனைப் பாடல் பிரியரே       போற்றி!
99. ஓம்  பாதயாத்திரைக் காவலரே  போற்றி!
100.ஓம் பார்புகழ் கொண்டவரே          போற்றி!   
101.ஓம் பார்வைக்கு இனியவரே        போற்றி!
102.ஓம் பிரம்ம ஞானியே                       போற்றி!
103.ஓம் பிரம்மச்சாரியே                          போற்றி!
104.ஓம் பொற்குவியல் கண்டவரே   போற்றி!
105.ஓம் பொன்னான ஆலயம் தந்தவரே போற்றி! 
106.ஓம் போகரின் மறு உருவே           போற்றி!
107.ஓம் மருத்துவத் திலகமே               போற்றி!
108.ஓம் சர்வ வெற்றி அளிப்பவரே    போற்றி!       
                                                    போற்றி!    போற்றி!     
 
 
 
 
                  

Tuesday, January 26, 2016

ஆறுமுகத்தம்பிரான் குருபூஜை

                                                              ஓம்

       மன்மத வருட தை மாத 11 தேதி, திங்கட்கிழமை 25-1-16 அன்று காலை 9மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் தம்பிரான் தியான மண்டபத்தில் நடைபெற்றது. பின் சண்முகார்ச்சனை, கொடையின் சிறப்பு பற்றி ஜோதிடவாணி திருமதி. அனுசுயா மனோகரன் உரை, மாலை 5 மணியளவில் திருவிளக்கு பூஜை, பொங்கலிடல், அருள்மிகு ஆறுமுகத் தம்பிரான் இளைஞர் சங்க கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

         பின் 10.30 மணிக்கு குருபூஜை ஆரம்பித்தது. 11.30 மணிக்கு தம்பிரானது அருளை அள்ளித்தரும் அன்னப் பிரசாதம் வழங்கும் வைபவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

                        


         

                                                  



                                      

                                            
                                                     kaavadaikoodam at thaippoosam

மஹா அலங்காரத்தில் தம்பிரான்





                     

Monday, January 25, 2016

தைப்பூசத் திருவிழா

                                                           ஓம்

                  மன்மத வருட தை 10ம் தேதி, பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய ஞாயிறன்று 24-1-16 தம்பிரான் வாழ்ந்த புனிதக் காவடிக் கூடத்திலிருந்து பலப்பலப் பால் குடங்களும் காவடிகளும் பழனியாண்டவர் கோவிலுக்குச் சென்று பழனியாண்டவரை வழிபட்டு பின் காவடிக்கூடம் வந்து தம்பிரானிடம் சமர்ப்பிக்கும்.. முன்னதாக அவரது சமாதியில் அதிகாலை 3.30 மணிக்கு  மஹா கணபதி யாகம் பின்  சிறப்பு அபிஷேக, அலங்காரங்களும் நடைபெற்றன.  இரவில் வள்ளி தேவானை சமேத சுப்ரமணியர் புஷ்ப அலங்காரத்தில் மகளிர் மாவிளக்கு ஏந்தி வர தம்பிரான் பாதயாத்திரைக் குழுவினரின் பஜனையுடன் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார்.


                               





காவடிக் கூடத்திலிருந்து பழனியாண்டவர் கோவிலுக்கு புறப்படும் பலபல காவடிகள் பால்குடங்கள்!


                                            

                            
                         

                                                       பழனியாண்டவர்

வண்ண புடைப்புச் சித்திரங்கள் -2


          EMBOSSED COLOUR WALL PAINTINGS OF AARUMUGATH THAMBIRAN -2


வண்ண புடைப்புச் சித்திரங்கள் -1 இங்கே காணவும்http://aarumugaththambiran.blogspot.in/2016/01/blog-post_7.html?m=1

                             
                     
                          தைப்பூசத்தன்று பழனி தண்டாயுதபாணியின் தரிசனம்        கிடைக்காததால் நாவைத் துண்டிக்கும் தம்பிரான்
      

                      
                  தம்பிரானது உன்னத பக்தியைக் கண்டு திவ்யதரிசனம் தரும் முருகப்பெருமான்


                        

கோவில் கட்ட முருகப்பெருமானார் காட்டும் புதையல்


                             
                   
அண்ணனும் தங்கையும் தூங்கும் போது     கள்ளர்கள் புதையலைக் கவர்தல்

                        

                 
                        முருகப்பெருமான் அருளால் கள்ளர்களின் பார்வை பறிபோதல்


                         
                                    கள்ளர்கள்  புதையலைக் கொடுத்து பார்வை திரும்பப் பெறல்
ஓட்டன் சத்திரம் அருகே அன்னதானச் சத்திரம் கட்ட  உத்தரவிடல்

                             
புதையலைக் கொண்டு திருத்தங்கல் குன்றினில் பழனியாண்டவர் கோவில் கட்டும் திருப்பணி செய்தல்



முருகப்பெருமான் அருளாணைப்படி திருத்தங்கல் பழனியாண்டவருக்கு தைப்பூசத்தன்று காவடி செலுத்தல்.

Saturday, January 16, 2016

சித்தர் போகர் சன்னதியில் அற்புதக் காட்சி!

                                                                    ஓம்

GRACE LIGHT FROM PAZHANI SITHTHAR BHOGAR
       
        தைத்திங்கள் இரண்டாம் நாளான இன்று  16-1-16  அதிகாலை 3.45 am தண்டாயுதபாணி  சன்னதியில் விளா பூஜையில் கலந்து கொண்டு முருகப்பெருமானின் ஆசி பெற்றேன். பின் 5.00 மணியளவில் பிரம்மமுகூர்த்த நேரத்தில் பிரகாரத்தை சுற்றி வரும்பொழுது,  சித்தர் போகர் சன்னதியில் உள்ள மேல் சுவற்றில் அமைந்த போகர் சிலையைப் படம்பிடித்தேன்.   போகர் தன் அருள்ஒளி பாய்ச்சும் கண்கொள்ளாக்காட்சி அவர் அருளால் படமாக்கப்பட்டுள்ளது! கண்டு உணர்ந்து வணங்கி தலையாய வைத்தியரான அவர் அருள் பெறுவோம்.


                 
                                         

இன்றும் தலையாய சித்தர் அகத்தியர் தம் ஜீவநாடி அருள்வாக்கில் தம் சீடரான போகர் அளவற்ற பணிவு, குருபக்தி உடையவர் என்றும் பாராட்டுகின்றார். தன் குருவின் வழிகாட்டலில் பிற சித்தர்களோடு சேர்ந்து நாம் நோயற்று வாழ பழனி முருகனின் நவபாஷாணச் சிலை செய்து இன்றும் நம் கர்மவினை களைந்து ஞானம் அடைய அருள் ஒளி பாய்ச்சும் அவர் பாதம் போற்றி வணங்குவோம்!

                                    போகர் சித்தர் திருவடிகளே போற்றி!
                                தண்டாயுதபாணி குமரனே போற்றி! போற்றி!!

Thursday, January 14, 2016

பாதயாத்திரைக் குழுவினர் பஜனைப் பாடல்கள்

                                                       ஓம்


        தைத்திங்கள் முதல்நாளாம் இன்று சோதியான முருகப்பெருமானை எங்கும் எவ்விடத்தும் எப்பொழுதும் காணும் ஒரு எளிய இனிய பாடலைக் காண்போம்.

                                      எங்கே கண்டாய்  முருகனை?

எங்கே கண்டாய் எங்கே கண்டாய்
எங்கள் முருகனை எங்கே கண்டாய்

அந்த இமயபுரியிலே உமையவளோடு
இடப்புறமாக ஆடக்கண்டேன்                            - எங்கே

அந்தக் கார்த்திகைப் பெண்களிடம் கந்த வடிவேலனும்
கார்த்திகைப் பாலனாக ஆடக்கண்டேன்     -எங்கே

அந்த ஆவினன்குடியிலே அவ்வைப் பாட்டியுடனே
ஆனந்தத் தமிழாக ஆடக்கண்டேன்                -எங்கே

அந்த சுவாமிமலை தன்னிலே சுந்தரேசனுடனே
வேதப் பொருளாக ஆடக் கண்டேன்               -எங்கே

அந்தச் செந்தூர்தனிலே செம்மணல் மேட்டிலே
சூரசம்ஹாரமாக ஆடக்கண்டேன்                   -எங்கே

அந்தப் பரங்குன்றம்தனிலே தெய்வயானையுடனே
திருமணக்கோலம் கொண்டாடக் கண்டேன்- எங்கே

அந்தத் தணிகைமலை மீதினிலே காவடிகளுடனே
சினம் தணிந்து விளையாடக்கண்டேன்         -எங்கே

அந்தச் சோலைமலை மீதினிலே வள்ளி தெய்வானையுடன்
கோல மயிலேறி ஆடக் கண்டேன்                      -எங்கே

திருத்தங்கல் மலைதனிலே ஆறுமுகத்தம்பிரானால்
பழனிமலை பாலனாக ஆடக் கண்டேன்          -எங்கே

எங்கும் கண்டோம் எங்கும் கண்டோம்
எங்கள் முருகனை எங்கும் கண்டோம்.

Wednesday, January 13, 2016

பாதயாத்திரைக் குழுவினர் பஜனைப் பாடல்கள்

                                                                    ஓம்

                              வேல்வேல்  பழனியாண்டவா!


வேல் வேல் முருகா வேல் முருகா
வெற்றிவேல் முருகா வேல் முருகா

வேல் வேல் முருகா வேல் முருகா
வெற்றிவேல் முருகா வேல் முருகா

ஆயிரம் பூஜைகள் செய்திடுவோம் ஆறுபடைத்தலங்களிலே
அந்த ஆறுபடை நாயகனை நினைத்தால்
             ஆயிரம் காரியம் நடந்துவிடும்
      நம்  ஆயிரம் காரியம் நடந்துவிடும்              ----- வேல்


அச்சங்களை நீக்கிடும் பாலகனாம்
சூரனை வதைத்திட்ட நாயகனாம்
அச்செந்தூர் வேலவனைத்தான் நினைத்தால்
               அச்சங்களெல்லாம் நீங்கிவிடும்
       நம்  அச்சங்களெல்லாம் நீங்கிவிடும்        ------வேல்


கூடிவிடும் அடியார்க்கடியவராம் குமரகுருபர நாயகராம்
அந்தக் குன்றக்குடி ஷண்முகரைத்தான் நினைத்தால்
                குறைகள் எல்லாம் நீங்கிவிடும்
         நம்  குறைகள் எல்லாம் நீங்கிவிடும்      -------வேல்


பாலனாய் குடிகொண்ட திருத்தலமாம்
பழனி ஆலயத் திருத்தலமாம்
அந்தப் பழனியாண்டவரைத்தான் நினைத்தால்
                 பாவங்களெல்லாம் நீங்கிவிடும்
          நம்  பாவங்களெல்லாம் நீங்கிவிடும்      ------வேல்


வெற்றிகள் சூடிய வேலவனாம்
வண்ணமயில் வாகனத்தில் வருபவனாம்
அந்த வேல்முருகனைத்தான் நினைத்தால்
                 வினைகள் எல்லாம் நீங்கிவிடும்
          நம் வினைகள் எல்லாம் நீங்கிவிடும்        ------வேல்


சங்கரன் மைந்தன் கோவிலிலே காவடிகள் கோடி சங்கமாம்
அந்தச் சங்கரன் மைந்தனைத்தான் நினைத்தால்
                  சங்கடமெல்லாம் தீர்ந்துவிடும்
          நம்  சங்கடமெல்லாம் தீர்ந்துவிடும்           -------வேல்


தம்பிரான் படைத்திட்ட திருத்தலமாம்
தீவினை அகற்றும் திருத்தலமாம்
நம் திருத்தங்கல் முருகனைத்தான் நினைத்தால்
                   தீவினையெல்லாம் தீர்ந்துவிடும்
           நம்   தீவினையெல்லாம் தீர்ந்துவிடும்     ------வேல்


பாதயாத்திரைக் குழுவினர் பஜனைப் பாடல்கள்

                                                             ஓம்

            தம்பிரான் தம்பிரான் ஆறுமுகத்தம்பிரான் ஆறுமுகத்தம்பிரான்

ஆறுமுகத்தம்பிரான் திருத்தங்கல் - திருச்செந்தூர் பாதயாத்திரைக் குழுவினர் வழிநெடுக தம்பிரானது புகழ்பாடி  செல்லும் இனிய பஜனைப் பாடல்களுள் ஒன்று.

தம்பிரான் தம்பிரான் ஆறுமுகத்தம்பிரான் ஆறுமுகத்தம்பிரான்
தம்பிரான் தம்பிரான் ஆறுமுகத்தம்பிரான் ஆறுமுகத்தம்பிரான்

அன்பர்களைக் காத்திடுவார் ஆறுமுகத்தம்பிரான்
துன்பங்களைப் போக்கிடுவார் ஆறுமுகத்தம்பிரான்

எளியார்க்கு அருள்புரிவார் ஆறுமுகத்தம்பிரான்
ஏழ்மைதனை அகற்றிடுவார் ஆறுமுகத்தம்பிரான்

கடும் விரத தவமேற்பார் ஆறுமுகத்தம்பிரான்
காவடிதான் தூக்கிச் சென்றார் ஆறுமுகத்தம்பிரான்

சோதனைகள் பலகடந்தார் ஆறுமுகத்தம்பிரான்
சோர்வில்லாமல் பழனிசெல்வார் ஆறுமுகத்தம்பிரான்

கந்தவடிவேலனைக் கண்டுகொண்டார் தம்பிரான்
கந்தன் தந்த பொருளைக் கொண்டுவந்தார் தம்பிரான்

தங்கல்மலை மீதினிலே ஆலயமேகட்டினார்
பழனிமலை ஆண்டவரும் அம்சமாகக் குடிகொண்டார்

நாடிவரும் பக்தருக்கு ஓடிவந்து அருள்புரிவார்
காவடிதூக்கும் அன்பருக்கு கோடிவரம் தந்திடுவார்

யாத்திரையில் துணைவந்தார் ஆறுமுகத்தம்பிரான்
யாத்திரைக்குப் பலன் தருவார் ஆறுமுகத்தம்பிரான்.

தைப்பூசத் திருவிழா அழைப்பிதழ்

                                                                        ஓம்

ஓம் ஆறுமுகத்தம்பிரானே போற்றி!

ஆறுமுகத்தம்பிரான் காயத்ரி மந்திரம்:


    ஓம் ஸ்ரீம் சித்தபுருஷாய வித்மஹே
     காவடி ஹஸ்தாய தீமஹி
     தந்நோ ஆறுமுகத் தம்பிரப் பிரசோதயாத்:


அன்பர்களே!  தம்பிரானது சமாதியி்ல் மஹா கணபதி யாகத்துடன் 24-1-2016 ஞாயிறன்று தைப்பூசத் திருவிழா ஆரம்பிக்கிறது. காவடிக்கூடத்தில் இருந்து பால்குடங்கள், காவடிகளுடன் திருவீதியுலா வந்து தம்பிரானது பழனியாண்டவர் திருக்கோயிலில் அவற்றை காணிக்கையாக்கும் வைபவம் நடைபெறும். பின்னர் அன்னதானம்.

மகளிர் மாவிளக்கு, வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் ஊர்வலம் இரவி்ல் நடைபெறும்.

25-1-16 திங்கள் அபிஷேகம், சண்முகார்ச்சனை மற்றும் இரவில் பெண்கள் பொங்கலிட  குருபூஜை நடைபெறும்.
அனைவரும் கலந்து கொண்டு அய்யனின் அருள் பெறுக!
இதோ அழைப்பிதழ் உங்களுக்காக!







                     

Thursday, January 7, 2016

வண்ண புடைப்புச் சித்திரங்கள் -1

                                                                          ஓம்
EMBOSSED COLOUR WALL PAINTINGS OF AARUMUGATH THAMBIRAN

தம்பிரானின் பிரமிட் தியான பீட மண்டபத்தின் மேல் சுவற்றில் அவர்தம் தவவாழ்க்கை நிகழ்வுகளைக் கவினுறக் கூறும் அழகிய புடைப்புச் சித்திரங்கள்!



சிங்காரத்தோப்பு நந்தவனத்தில் முருகப்பெருமான் வழிபாட்டிற்கு பூக்கொய்யும்                 தம்பிரான்


முருகப்பெருமானது திருவருளினால் மருத்துவத்தொண்டு செய்யும் தம்பிரான்



               அன்னதானத்திற்கு பிஷை வாங்கும் தம்பிரான்



                 
                                                 ஜமீன்தார் அய்யனை புறக்கணித்தல்
       

           
        

                                              ஜமீன்தாரின் நோயை நீக்கும் தம்பிரான்


                               
           
                   ஊர்மக்களுக்கு அய்யன் அன்னதானம் செய்வித்தல்


                                       
       
                                    ஊர்மக்கள் ஒன்றுகூடி அய்யனை வழியனுப்பல்

   
                                      

பழனிமலையில் ஆற்றுவெள்ளத்தை விபூதிகொண்டு விலக்கி பக்தர்களுடன் செல்லல்




                                     
                                   தங்கை வீரலட்சுமியுடன் பழனிக்கு செல்லல்


    வண்ண புடைப்புச்சித்திரங்கள் -2 காண  http://aarumugaththambiran.blogspot.in/2016/01/2.html

வருகின்ற 24-1-2016 ஞாயிற்றுக்கிழமை தைப்பூசம் மிகச்சிறப்பாகக் பால்குடம் மற்றும் காவடிகளுடன் இங்குக் கொண்டாடப்படும். அன்னதான விருந்தும் உண்டு. அடுத்தநாள் குருபூஜை. அனைவரும் வந்து கலந்துகொண்டு தம்பிரானின் அருளைப் பெறுக!