Moving Image

Tuesday, August 1, 2023

அழகான பழனிமலை ஆண்டவா!

முருகா முருகா என அழைத்து

உருகி கரைந்திடு மனமே! அருமையான பாடல்! 


அழகானபழனி மலை ஆண்டவா

உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா

வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே
வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே
வரவேண்டும் மயில் மீது முருகைய்யனே
முருகா முருகா முருகா முருக

அழகான பழனி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா
அழகான பழனி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா

வெள்ளைத் திருநீறும் வெற்றி வடிவேலும்
உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளைத் திருநீறும் வெற்றி வடிவேலும்
உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி மயிலேறி வேலன் வருவதை
நெஞ்சம் காணுமே

வெள்ளைத் திருநீறும் வெற்றி வடிவேலும்
உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளைத் திருநீறும் வெற்றி வடிவேலும்
உள்ளத்தில் தோன்றுமே
வெள்ளி மயிலேறி வேலன் வருவதை
நெஞ்சம் காணுமே

எனை ஆளும் ஆண்டவனே
எழில் வேலவா.... 
எனை ஆளும் ஆண்டவனே
எழில் வேலவா... 

எளியேனும் உனைப் பாட
அருள்வாய் ஐயா
எளியேனும் உனைப் பாட
அருள்வாய் ஐயா
முருகா முருகா முருகா முருகா

அழகான பழனி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா
அழகான பழனி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா

நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட
நல்லருள் செய்வாய்
நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட
நல்லருள் செய்வாய்
தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட
திருவருள் புரிவாய்

நல்லதெல்லாம் என்னை நாடி பெருகிட
நல்லருள் செய்வாய்
தீயதெல்லாம் உடன் தீர்ந்து கருகிட
திருவருள் புரிவாய்

உனை அன்றி வேறில்லை
தெய்வம் கந்தையா
உனை அன்றி வேறில்லை
தெய்வம் கந்தையா

உலகாளும் ஆண்டவனே நீதான் அய்யா
உலகாளும் ஆண்டவனே நீதான் அய்யா
முருக முருக முருக முருக

அழகான பழனி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா
அழகான பழனி மலை ஆண்டவா
உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா

வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே
வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே
வரவேண்டும் மயில் மீது முருகைய்யனே
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா

Thursday, February 9, 2023

ஆறுமுத்தம்பிரான் தைபூச குருபூசை 2023

 தைப்பூச  குருபூசை


இந்த ஆண்டு சித்தர் ஸ்ரீ  ஆறுமுத்தம்பிரான் தைப்பூச குருபூசை விழா மிகச்சிறப்பாக 5-2-23 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 6-2-23 திங்கட்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு ஊரிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். பால் குடஙகள் காவடிகள் எடுத்து குருவிற்கு காணிக்களைச் செலுத்தினர். பிணிகளைக் களையும் மருந்தாக  அன்னதானம்  வழங்கப்பட்டது.  குருபூசை விழாவிலிருந்து சில காட்சிகள். 







Tuesday, August 31, 2021

ஆறுமுகத்தம்பிரானின் குருவார பூசை

 ஆவணி 10, வியாழக்கிழமை  26-9-21 அன்று, தம்பிரான் வாழ்ந்த திருத்தங்கல் நடுத்தெரு காவடிக்கூடத்தில்.. 




ஐயனின் பிரமிட் ஜீவசமாதியில்
பரவும் அற்புத அருளலைகள்










Tuesday, June 22, 2021

கந்தர் அநுபூதி விளக்கம்




கந்தர் அநுபூதி விளக்கம்


கந்தர் அ நுபூதி பாடல் வரிகள் மற்றும் இனிய ஒலி வடிவத்தில் கேட்க இங்கே அழுத்தவும்!


காப்பு

"சரணம்" என்று தம்மை வந்தடைந்தவர்களுக்கு அருள்புரியும் ஆறுமுகக் கடவுளின் அணிகலனாகக் கல்போன்ற நெஞ்சமும் இளகி உருகுமாறு செம்மையான இலக்கியத் தமிழ்ச் சொற்களால் தொடுக்கப் பெற்ற கந்தர் அநுபூதி என்னும் கவிமாலையானது சிறப்பாக அமையும் பொருட்டு ஐந்து கரங்களையுடைய திருவிநாயகப்பெருமானின் திருவடிகளைப் பணிந்து வணங்குகின்றேன்"

1."ஆடிவரும் குதிரையைப் போன்ற மயில் வாகனமே! வேலாயுதமே! அழகான சேவலே!" என்று துதி செய்து திருப்பாடல்களைப் பாடுவதையே அடியேனின் வாழ்நாட் பணியாக இருக்கும் படி அருள்புரிவீராக! "கஜமுகாசுரன்" எனப்படும் ஓர் அசுரன் பெரியதொரு யானையின் முகத்தையுடையவனாகத் தோன்றி விண்ணோர்களைப் பகைவர்களாகக் கருதி அவர்களைத் தேடிச்சென்ற போது, போர்க்களத்தில் அவனைக் கொன்றழித்த திருவிநாயகப்பெருமானின் சகோதரனாகிய கந்தப்பெருமானே!.

2.திருமுருகப்பெருமானே! விண்ணோர்களின் மன்னரே! உள்ளக் களிப்பும் கலக்கமின்மையும் அற்று, பல்வகை யோக மார்க்க வழிகள் சம்பந்தமான பேச்சுக்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியைத் தருபவர் தேவரீர் ஒருவரே அன்றோ! எல்லா விதமான பந்தங்களும், "யான்", "எனது" எனப்படும் ஆணவ மலங்கள் அழிந்து தொலைவதற்குரிய மேலான ஆன்மிக உபதேசங்களை அடியேனுக்கு உபதேசித்தருள்வீராக!

3.ஆறுமுகக் கடவுளே! "பரம்பொருள்" என்பது யாது? ஆகாயமோ? நீரோ? பூமியோ? நெருப்போ? காற்றோ? ஞானத்தினால் அறியக்கூடிய பொருளோ? ஓதப்படுகின்ற நான்கு வேதங்களோ? "நான்" என்று சொல்லப்படுகின்ற சீவனோ? மனமோ? "நீயே நான் - நானே நீ" என்று கூறி அடியேனை ஆட்கொண்டது தேவரீரோ?.

4.வளையல் அணிந்த கைகளையுடைய மனைவியொடு மக்கள் என்று சொல்லப்படும் குடும்பப் பந்தத்தில் அகப்பட்டு அடியேன் அழிந்து போவது நியாயமாகுமோ? அசுரர்களாகிய தன் சுற்றத்தினர் சூழ போரிடுவதற்கு எழுந்த சூரபன்மனின் மார்பையும் அவன் தன் சுற்றத்தினருடன் ஒளிந்திருந்த கிரவுஞ்ச மலையையும் தொளைத்துக்கொண்டு ஊடுருவிச் செல்லும்படியாக விடுவித்த வேலாயுதத்தையுடைய கந்தப்பெருமானே!.

5.இவ்வுலக வாழ்க்கையைச் சார்ந்த பொய்யான காட்சிகளாலும் நம்பிக்கைகளாலுமான பெரிய மாயையை நீக்க வல்ல கடவுளான திருமுருகப்பெருமான் தன் ஆறு திருமுகங்களாலும் பல வழிகளில் உபதேசித்து அருளிய தத்துவங்களை, அந்தோ, மீண்டும் நினைவு கூர்ந்து] சொல்லாமற் போய்விட்டேனே! "வீடு, துணிமணி, மாதர்கள்" ஆகியவற்றால் இறுதியில் பெரும் வருத்தத்தைத் தரும் பொய்யான இவ்வுலக மாயையில் அகப்பட்டுக் கொண்டு அதை உண்மை என்று நம்பி அடியேன் இன்னும் தயங்கிக் கொண்டிருக்கின்றேனே!.

6.அடியேனின் கடினமான கல்போன்ற மனத்தின் மீது தேவரீரின் திருவடிகளாகிய அழகு நிறைந்த தாமரைப் பூக்கள் மலரக்கூடுமோ? வள்ளியம்மையாரின் திருவடிகள் மீது குறையாத மிக்க காதல் கொண்ட கருணாகரனே! அடியேன் செய்ய வேண்டிய பணிகள் எவை என்று கூறுவீரோ?
.
7.அழிந்துபோகின்ற மனமே! நீ முக்திபெறும் வழியைக் கூறுகின்றேன், கேட்பாயாக! உன்னிடம் உள்ளதை மறைக்காமல் பிறருக்குத் தானமாகக் கொடுப்பாயாக! கூர்மையான வேலினைத் தாங்கிய இறைவன் திருமுருகப்பெருமானின் திருவடிகளை நினைந்து தியானம் செய்துவருவாயாக! நீண்ட காலமாகத் தொடர்ந்து வருகின்ற பிறவித் துன்பமாகிய வேதனையைத் தூளாக்கும் பொருட்டு அந்தத் துன்பத்தின் காரணமாகிய பற்றினைச் சுட்டெரிப்பாயாக! வினைகள் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டிருப்பாயாக?.

8.குமாரப்பெருமானே! அடியேன் விரும்பி வாழும் ஊர், மனைவி மக்கள் முதலிய உறவினர்கள், "நான்" என்று சொல்லப்படுகின்ற ஆன்மா ஆகியவை பற்றிய அடியேனின் மயக்கம் கெடுமாறு உண்மைப் பொருளைப் போதித்தவரே! என்றென்றும் குமரனாகவும் இமய மலையரசனின் குமாரி பார்வதி தேவியின் மைந்தனாகவும் இருந்துகொண்டு, போர்க்களத்தில் போரிடும் சூரபன்மன் முதலிய அசுரர்களை அழித்த பெருமானே!..

9.தேன்சொரியும் நறுமண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலையுடைய பெண்களின் மோகவலையில் சிக்கிக் கொண்டு உள்ளம் தடுமாற்றம் அடையும் துன்பத்திலிருந்து அடியேன் எப்போது நீங்குவேன்? தடைகள் எதுவுமின்றி கிரவுஞ்ச மலையை ஊடுருவிச் செல்லும்படி வேற்படையை எறிந்த வலிமையுடையவரும், துன்பமும் பயமும் அற்றவருமான திருமுருகப்பெருமானே!.

10.கரிய எருமைக்கடாவின் மீது அடியேனின் உயிரைக் கவர்ந்து செல்லவேண்டி யமன் வரும்பொழுது அழகிய தோகைகளையுடைய மயிலின் மீது ஏறி அடியேன் முன்வந்து காப்பாற்றியருள்வீராக! மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மார்பினையுடையவரே! "வலாரி" எனப்படும் இந்திரனின் விண்ணுலகத்திற்குப் விரோதியாகிய சூரபன்மன் ஒளிந்திருந்த மாமரம் அழிந்து போகுமாறு வேலாயுதத்தை வீசிய திருமுருகப்பெருமானே!
.
11."கூகா" என கூச்சலிட்டு அடியேனின் சுற்றத்தார் ஒன்று கூடி அழ அடியேன் இறந்து போகா வண்ணம் உண்மையான ஞானப்பொருளை எனக்கு உபதேசித்த பரம்பொருளே! "நாகாசலம்" எனப்படும் திருச்செங்கோட்டு மலை மீது வதியும் வேலாயுதனே! "ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம்' என்னும் நான்கு வகையான கவிகளைப் பாடும் திறத்தை தேவரீரின் அடியார்களுக்கு வழங்கியருளும் பெருமாளே! வானுலகத்து சிரோ ரத்தினமே!

12.செவ்விய மான் ஈன்ற மகளாம் வள்ளி அம்மையாரைக் களவிற் கொண்டு சென்ற கள்வனாகிய பிறப்பும் இறப்பு இல்லாத திருமுருகப்பெருமான், "பேசாத மவுன நிலையில் சும்மா இருப்பாயாக" என்று அடியேனுக்கு உபதேசித்தவுடனே இவ்வுலகப் பொருள் எல்லாம் மறைந்து போனது வியப்பாகவுள்ளது.

13.ஒப்பற்ற வேலாயுதத்தை ஏந்திய திருமுருகப்பெருமான் நமது குரு என்று, அப்பெருமானின் திருவருளால் அறியாதவர் அப்பெருமானின் திருவருளை அறியும் தன்மையுடையவரோ? மெய்ப்பொருளாகிய திருமுருகப்பெருமான், உருவமுடையவரும் அல்லர், உருமற்றவரும் அல்லர், உள்ளதோர் பொருளும் அல்லர், இல்லாத பொருளும் அல்லர், இருள் சூழ்ந்த பொருளும் அல்லர், ஒளி பொருந்திய பொருளும் அல்லர்.

14.மனமே! ஒளிபொருந்திய வேலாயுதத்தை ஏந்திய திருமுருகப்பெருமானின் வீரக்கழல்கள் அணியப்பெற்ற திருவடிகளை அடைந்து முக்தியைப் பெறுவாயாக! உடல், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐம்பொறிகள் வழியாக உண்டாகும் ஆசைகளை உறுதியாக விட்டு விடுவாயாக1.

15.முருகா, குமரா, குகா!" என்று மனம் உருகி அழைக்கும் செயலொழுக்கத்தையும் ஞானத்தையும் எப்போது அருள்வீர்? என்று பக்தியுடன் பொருந்தி நிற்கும் வானோரும் இப்பூவுலகத்தினரும் துதித்துப் போற்றும் "தன் வயத்தம், தூய்மை, இயற்கையறிவு, முற்றறிவு, பற்றின்மை, பேரருள், எல்லாம் வன்மை, வரம்பிலா இன்பம்" என்னும் எட்டு வகையான தெய்வீகக் குணங்களாலாகிய பஞ்சரத்தில் வதியும் மகா குருவாகிய திருமுருகப்பெருமானே!.

16.பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, "நல்லது, கெட்டது" எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற்கொண்டு அடியேன் இவ்வாறு அலைந்து திரிவது தகுமோ? தெய்வீக வீரரே! பழங்காலத்து அசுரன் சூரபன்மன் இறந்தொழியும் படி வேலாயுதத்தைச் செலுத்திய சூரரே! தேவருலகைக் காப்பாற்றியவரே.

17.கற்று அறியும் கல்வியும் பெற்றுள்ள அறிவும் வேலாயுதப் பெருமானே நமக்கு அருளியுள்ள காரணத்தால், உலகத்தோரே! இந்நிலவுலகில் உள்ள அளவு ஆசையால் விளையும் மயக்கத்தை நீக்கி, அறச்செயல்களையும் உண்மையையும் கடைப்பிடித்து அறநெறியில் சென்று சேர்வீர்களாக, மேலும் திருமுருகப்பெருமான் அருட்கொடையாக அளித்த நாவைக் கொண்டு அப்பரம்பொருளின் புகழை ஓதிக்கொண்டிருப்பீர்களாக!.

18.சிவபெருமானின் மைந்தரே! பிறவாமலும், இறவாமலும், உணராமலும், மறவாமலும், பிரமனும் திருமாலும் அறியாமலும் விளங்குபவரே! யாவரினும் மேம்பட்டவரே! பாவமற்றவரே! புகலிடம் அளிக்கும் மூர்த்தியே! வானுலகைக் காத்தருளும் பெருமானே! சூரபன்மனுக்கு அச்சம் தருபவரே!.

19.கூரிய வேலாயுதத்தை ஏந்தியவாறு பிரபஞ்சத்தை ஆளும் ஆதியும் அந்தமும் இல்லாத மாமன்னரே! "வறுமை" என்னும் ஒரு பாவி தோன்றியவுடனே அழகும் செல்வமும் நல்ல மனமும் குணமும் குடும்பத்தின் பெருமையும் குலத்தின் பெருமையும் ஒருவரை விட்டுப் போய்விடுகின்றனவே.!

20.கிடைத்தற்கு அரிய உண்மைப் பொருளைப் பெறுதற்கு அடியேன் தகுதியுள்ளவனாகக் கருதித் தேவரீர் அடியேனுக்கு உபதேசத்தைப் போதித்த முறை வியக்கத் தக்கதே! மிகவும் உறுதியானதும் நிலையானதுமான வலிமையுடைய பிரணவப் பொருளாக வானோர் விரும்பித் தியானிக்கும் செவ்வேளே! வானோர் உலகைத் தாங்குபவரே!.

21நினைவும் மறதியும் அற்ற ஆன்மிக நிலையைக் கண்டுகொள்ள அடியேனுக்குத் தேவரீரின் தாமரை மலர்களையொத்த இரு திருவடிகளை அருள்வதற்கென்று மனம் இரங்குவீராக! கேட்ட வரங்களை அளிக்கும் மூர்த்தியே! திருமுருகப்பெருமானே! மயில் வாகனக் கடவுளே! அருவருப்புக்குரிய அசுரனாகிய சூரபன்மனைத் தேவரீரின் வேலாயுதத்தால் பிளந்தவரே!.

22.காளைப் பருவத்துக் குமாரமூர்த்தி என்று தியானித்து தேவரீரின் திருவடிகளைப் பணியும் படியான தவப்பேற்றை அடியேன் அடைந்தது வியப்பானதொன்றே! தென்னம் பாளையைப் போன்ற நீண்ட கூந்தலை உடைய வள்ளியம்மையாரின் திருப்பாதங்களைப் போற்றும் தேவரீர், விண்ணோர்களுக்குத் தலைவராய் மேருமலை ஒத்த பெருமை உடையவராகத் திகழ்கின்றீர்.

23.தேவரீரின் திருவடிகளைத் குறித்துத் தியானிக்காமல் அடியேன் அறிவின்மையால் முழுதும் அழிந்து படலாமோ? இது முறையோ? கூர்மையும் ஆற்றலும் உடைய வேலாயுதத்தை ஏந்தியவாறு உலகை ஆளும் மாமன்னரே, மின்னலையும் கொடியையும் ஒத்த குறவர் குல நங்கையாகிய வள்ளியம்மையாரைச் சேர்ந்த குணக்குன்று போன்றவரே!.

24.கூரிய வேல் போன்ற கண்களையுடைய மாதர்களின் கொங்கையிலே சேரும் விருப்பத்தை உடைய அடியேனின் மனம் தேவரீரின் திருவருள் கிடைக்கவேண்டும் என்று எண்ணும் நற்பேற்றினைப் பெறுமோ? மாமரமாகவும் கிரவுஞ்ச மலையாகவும் உருவெடுத்திருந்த அசுரன் சூரபன்மனை அழிப்பதற்கென்று அவற்றை வேரொடு தொளைத்து அழித்த பெரும் போர் செய்யவல்ல வேலாயுத்தை ஏந்தியவாறு உலகத்தைக் காக்கும் கடவுளே1

25.உண்மை வாழ்வென்று எண்ணி கொடிய வினைக்கு ஈடான இந்த வாழ்வில் களித்து மகிழ்ந்து, ஐயோ, அடியேன் அலைதல் முறையோ? தேவரீரின் திருக்கரங்கள் மட்டுமன்றி, கையில் ஏந்தும் வேலாயுதம், வீரக்கழல்கள் அணியப்பெற்ற திருவடிகள் ஆகியவை எல்லாம் செந்நிறமாய் அமைந்து, மயில் வாகனத்தின் மீது ஏறிய மாவீரரே!.

26.விண்ணுகத்தின் நாயகமணியே, ஒருதுணையும் இல்லாத அடியேன் தேவரீரின் திருவருளைப் பெறுமாறு சிறிதளவேனும் தேவரீர் எண்ணவில்லையே! வேதங்களாலும் ஆகமங்களாலும் போற்றப்படுபவரே! வேத முதல்வரே! வேதங்களைத் தொகுத்தவரே! ஆகமங்களை வகுத்தவரே! ஞான விநோத மூர்த்தியே! மனத்துக்கு எட்டாதவரே!
.
27.மின்னலைப் போலத் தோன்றி உடனே மறையும் நிலையற்ற வாழ்வை விரும்பியவனாகிய அடியேன் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் அடியேனின் வினைப்பயன் தானோ? பொன்னே! மணியே! செல்வமே! முக்தியாகிய அருட்பேற்றினை அளிப்பவரே! உலகை ஆளும் மாமன்னரே! மயில் வாகனத்தில் ஏறிவரும் முழுமுதற் கடவுளே!.

28.இனிய அமுதமே! கூரிய வேலாயுதத்தை ஏந்திய மாமன்னரே! ஞானத்தின் இருப்பிடமே! 'யான்' என்னும் ஆணவமுடைய அடியேனை தேவரீர் ஆட்கொண்டு அருளி எல்லாம் தானாகி நிலைத்திருக்கும் மேலான நிலையை இத்தன்மையது என்று விளக்கிக் கூற முடியுமோ?.

29.இல்வாழ்க்கை என்னும் மாய வாழ்வில் அடியேனைச் சிக்கவைத்துள்ள தேவரீர் கொடியவனாகிய அடியேனது அறியாமையைப் பொறுத்து மன்னித்தருளவில்லையே! மற்போர் செய்வதற்குரிய பன்னிரண்டு தோள்களிலும் அடியேனின் சொற்களாலாகிய பாடல்களையே மாலைகளாக அணிந்துகொள்ளும் ஒளி வீசும் வேலாயுதரே!.

31.மயிலை வாகனமாகக் கொண்டுள்ள திருமுருகப்பெருமானே! பாழ்படுவதான வாழ்க்கை என்னும் இந்தப் பெரிய மாயைச் சூழலிலே அடியேன் வீழ்க என்று தேவரீர் விதித்துவிட்டீரே! தேவரீர் அடியேனை இங்ஙனம் மாயை வாழ்வில் தள்ளி சிக்கவைத்தற்கு ஏற்கனவே அடியேன் செய்துள்ள தாழ்வான செயல்கள் ஏதேனும் காரணமாக உள்ளனவோ? அது எவ்வாறாயினும் தேவரீர் நீடு வாழ்வீராக!.

32.வெற்றி வேலனே! கலை சார்ந்த நூல்களையே அடியேன் கலக்கத்துடன் விரைந்து உருப்போட்டுக்கற்று தலை வேதனையுறும்படி ஆகிவிடவோ? கொலைத் தொழில் புரியும் வேடர் குலத்தில் தோன்றிய பெண் யானையைப் போன்ற வள்ளியம்மையாரைச் சேர்ந்தவரும் கிரவுஞ்ச மலையை வெற்றி வேலால் பிளந்தவருமான மலைபோன்ற கடவுளே!.

33.கங்கை நதி ஈன்ற வரத மூர்த்தியே! கந்தப்பெருமானே! திருமுருகப்பெருமானே! கருணைக்கு இருப்பிடமானவரே! மனத்துக்கு வருத்தம் தரும் இல்லற வாழ்க்கையுடன் செல்வம் என்னும் விந்திய மலைக்காடு போன்ற சிக்கல் நிறைந்த சூழலை அடியேன் என்று விட்டு விலகுவேன்?.

34.போரில் வல்ல மயில் வாகனத்தையுடையவரே! சண்முக மூர்த்தியே! கங்கை நதியின் பால குமாரனே! கிருபாகர மூர்த்தியே! அழகிய மாதர்கள் நிமித்தம் தீய வழியில் சென்று அடியேன் மனம் குலைந்து போகா வண்ணம் அடியேனுக்கு வரந்தந்து அருள்வாயாக!.

35.பிறை போன்ற ஒளி வீசும் நெற்றியை உடைய வள்ளியம்மையாரைத் தவிர வேறு யாரையும் துதிக்காத விரதம் பூண்டவரே! விண்ணோர்களின் மாமன்னரே! பிரமன் படைத்ததும் வினையாலானதுமான உடலைப் புறக்கணித்துவிட்டு அடியேன் நற்கதியை அடையும் படி செந்தாமரை மலர்களையொக்கும் தேவரீரின் வீரக்கழல்கள் அணியப்பெற்ற திருவடிகளை அடியேனுக்கு எப்போது அருள்வீர்?.

36.பிரமன் முதலாய விண்ணோர் தங்கள் தலையுச்சிமேல் அணியும் செந்தாமரை மலர்களையொக்கும் திருவடிகளை உடையவரே! வள்ளியம்மையாரின் திருவடிகளைத் தேவரீரின் முடிமீது கொள்பவரே! சிவபெருமான், "நாதரே, குமராய நம" என்று வணங்கி பிரணவ மந்திரத்தின் பொருளைத் தமக்கு உபதேசிப்பீராக என்று கேட்கத் தேவரீர் உபதேசித்தருளிய பொருள்தான் யாதோ?.

37.மனமே! அசுரன் சூரபன்மன் ஒளிந்திருந்த கிரவுஞ்ச மலை மீது செலுத்திய ஆற்றல் மிக்க வேலாயுதத்தை ஏந்திய திருமுருகக் கடவுளைப் போற்றும் அடியார்களின் குழுவைச் சேர்ந்தவன் என்னும் பதவியைப் பெறுவதையே நீ விரும்புவாயாக! "யான்" என்னும் ஆணவத்தை பொறுமையாகிய அறிவைக்கொண்டு அடியோடு வேருடன் அரிந்து தள்ளிவிடுவாயாக!.

38.கூதள மாலை அணியப் பெற்றவரே! வேடர் குலத்தவரான வள்ளியம்மையாரின் தலைவரே! வேதாளக் கூட்டத்தினர் புகழ்கின்ற வேலாயுத மூர்த்தியே! வீண்பேச்சு பேசுபவனாகவும் மிகவும் தீய குணமுடையவனுமாகிய அடியேனை ஒரு பொருளாகக் கருதி தேவரீர் ஆண்டருளிய கருணையானது சொல்லுந்தரமுடையதோ?.

39.உலகை ஆளும் மாமன்னரே! வேடர் குலத்தவரும் மின்னற்கொடி போன்றவருமான வள்ளியம்மையாரின் தோள்களைச் சேரும் கடவுளே! சிவபெருமானுக்குக் குருமூர்த்தியானவரே! பெரிய ஏழுவகையான பிறப்பு நீங்குமாறு மயக்கம் நீங்காத மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை எனப்படும் மூன்று வகை ஆசைகளும் எப்போது தான் முடிவுறுமோ?.

40.சுனைகள், அருவித் துறைகள், பசிய தினைப்புனம் ஆகியவற்றினிடையே வள்ளியம்மையாரைக் காணும் பொருட்டுத் திரிந்தவரே! வினையை வெருட்டி ஓட்டும் ஒளிபொருந்திய தேவரீரின் வேலாயுதத்தை அடியேன் மறவேன்! அத்தகைய அடியேன் இல்லற வாழ்வில் அகப்பட்டுக் கலங்கி அறிவை இழந்து மயக்கம் அடையலாகுமோ?.

41.வெற்றியைத் தரவல்ல வேலாயுதத்தை உடையவரே! திருமுருகப்பெருமானே! மயில் வாகனனே! யோக மூர்த்தியே! சிவபெருமானுக்கு ஞானோபதேசம் செய்த குருமூர்த்தியே! யமன் அடியேனின் உயிரைக் கலக்கிப் பிடிக்க வரும் அந்நாளில் அடியேன் இறவாது தேவரீரின் திருவடிகளை அடியேன் சேருமாறு காப்பாற்றியருள்வீராக!.

42.தியானிக்கப்படும் பொருளை, பசு, பாசம் பற்றிய அறிவைக் கொண்டு தியானிக்காமல், பதிஞானத்தைத் தியானித்து அறிகின்ற வழியைத் தனிச் சிறப்பு மிக்க வேலாயுதத்தை உடைய திருமுருகப்பெருமான் அடியேனுக்கு உபதேசித்தருளியவுடனே உலகத்தாருடன் கொண்டொழுகும் நெருங்கிய உறவுகள், வாக்கு, மனம், அறிவு ஆகியவற்றோடு அறியாமையும் நீங்கி ஒழிந்தனவே!.

43.ஆடை அலங்காரமாக முத்து, மரகதம் ஆகிய மணி வகைகளையும் ஆடையையும் அணியப்பெற்றவரும் வேடர் குலத்தவருமான வள்ளியம்மையாரின் அன்பரே! திருமுருகப்பெருமானே! தேவரீரின் அன்பும் அருளும் அடியேனுக்குக் கிடைத்த நற்பெற்றால், அடியேனின் ஆசை என்னும் விலங்கு பொடியாகிய பின்னர் மவுனம் என்னும் அனுபவ ஞானம் பிறந்ததுவே!.

44.பகைவர்களைத் தொளைத்து அழிக்கும் ஒப்பற்ற வேலாயுதத்தை உடைய திருமுருகப்பெருமானே! வீடுபேற்றின் நிலையிலும், விண்ணோர்களின் தலை மீதும் நான்கு வேதங்களிலும் கொடிய காட்டிடையேயும் தினைப்புனத்திலும் விளங்கும் வீரக்கழல்கள் அணியப்பெற்றத் தேவரீரின் திருவடிகளை அடியேன் சிரசின்மீது அடைக்கலமாகச் சூட்டிக் கொள்ளுமாறு தேவரீர் தந்தருளிய கருணையை அடியேன் எடுத்துச் சொல்லக்கூடுமோ?.

45.குரு மூர்த்தியே! குமாரப்பெருமானே! குலிசாயுதத்தை உடையவனே! பிணி முகம் என்னும் யானையை வாகனமாகக் கொண்டவனே! சிவயோகத்தை அருளும் கருணா மூர்த்தியே! தாம் கற்ற கல்வியறிவை பிறருக்குப் பயன்படுமாறு எடுத்துச் சொல்லாது வைத்துக் கொண்டிருப்பவர்களிடம் சென்று அடியேன் இரந்து கேளாவண்ணம் தேவரீர் உண்மை ஞானப்பொருளை ஈந்து அருள்புரிவீரோ?.

46.கந்தப் பெருமானே! ஒளிவீசும் வேலாயுதத்தை உடையவரே! உமாதேவியின் மைந்தரே! குமார மூர்த்தியே! வேத மூர்த்தியே! தேவரீர் அடியேனின் தாயும், அடியேனுக்கு அருள்புரியும் தந்தையும் ஆவீர்! அடியேனின் மனவருத்தங்கள் யாவற்றையும் நீக்கி அடியேனை ஆண்டருள்வீராக!.

47.சீற்றங்கொண்டு வந்த சூரபன்மனை அழித்து, விண்ணோர் இன்புறுமாறு அவர்களின் பொன்னுலகைக் குளிர்வித்தவரே! 24 ஆன்ம தத்துவம், 7 வித்யா தத்துவம், 5 சிவ தத்துவம் ஆகிய] முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அவற்றிற்கு அப்பால் உள்ள நிலையை எய்தும் நற்பேற்றினை அடியேன் பெறும் வாய்ப்பு உண்டோ?.

48.ஜீவபோதம் கடந்த நிலையில் நின்று சிவபோதத்தால் தேவரீரை அறியும் ஞானியரின் ஞானநிலையில் பிரிவு ஒன்றும் இல்லாது நிற்கும் திருமுருகப்பெருமான் அன்றோ தேவரீர்! உலக பந்தமான நெருங்கிய உறவுகள் அற்றுப் போகும் நிலையை எய்துவதால் அறியாமை என்னும் இருள் சிதைவுற்று அழியுமாறு மனக்கலக்கம் என்னும் மயக்கத்தை வென்ற ஞானியர்களோடு பொருந்தும் வேலாயுதக் கடவுளே!.

49.ஒளி வீசும் கதிர்களையுடைய வேலாயுத்தை ஏந்திய வேறுபாடுடைய திருமுருகப்பெருமானே! தேவரீரை நினைத்துத் தியானிப்பவர்களின் துக்கங்களை நீக்கும் கருணை விளங்கும் பேரொளியே! ஒரு சார்பும் இல்லாது தனித்து விளங்கும் பரம்பொருள் இத்தன்மைத்து என்று அறியுமாறு மற்றவருக்கு அடியேன் சொல்ல இயலுமோ?.

50.கங்கை நதிக்கு மைந்தரே! ஞானசுகத்தின் தலைவரே! திதி என்பவளின் புத்திரர்களாகிய அசுரர்களின் பெருமையைக் கெடுத்து அழித்த அதிவீரரே! அறிவு குலைந்து மிகவும் உள்ளம் சோர்வுற்று மயங்கி நற்கதி பெறும் வழியை இழந்து வீணாகக் கெட்டழிதல் அடியேனின் தலை விதியோ?.

51.உருவமுள்ளவராகவும், உருவமில்லாதவராகவும், உள்ள பொருளாகவும், காணவியலாத பொருளாகவும், நறுமணமாகவும், அந்த நறுமணத்தை உடைய மலராகவும், இரத்தினமாகவும் அந்த இரத்தினம் வீசும் ஒளியாகவும், உயிர் இடம்பெறும் கருவாகவும், உடலாகவும், உயிராகவும் நற்கதியான புகலிடமாகவும் அந்த நற்கதியை நோக்கிச் செலுத்தும் விதியாகவும் விளங்கும் குகமூர்த்தியே! தேவரீர் குருமூர்த்தியாக எழுந்தருளிவந்து அடியேனுக்கு அருள்புரிவீராக!.


நன்றி: http://karaneeswarartemple.blogspot.in/

Wednesday, March 10, 2021

எளிதாக பிறவா பெருநிலை அடைய வேண்டுமா?

 



மாணிக்கவாசகர் அன்றே கூறிய சத்திய நிகழ்வு ….

வானவூர் கொள்வோம் நாம் மாயப்படை வாராமே!

46 - திருப்படையெழுச்சி

ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்

மானமா ஏறும்ஐயர் மதிவெண் குடைகவிமின்

ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள

வானஊர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே 

தொண்டர்காள் தூசிசெல்லீர் பக்தர்காள் சூழப்போகீர்

ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்

திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்

அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே. ⁠ .

மாதந்தோறும் பௌர்ணமியில் முக்தி எனும் ஆத்மவிடுதலை சித்தர்கள், ரிசிகள் புடைசூழ குருவின் திருவருளால் ஆதிசக்தி தேவி நமை ஈசனுடன் மிக எளிதாக சேர்ப்பித்து மண்ணில் நல் வித்துக்களாய் வாழ அருள்புரிகின்றார்! வாரீர் பாண்டிச்சேரி ஞானாலயத்திற்கு!

மந்திர தீட்சை வழங்கி பிறவாப் பெரு நிலை அடையச் செய்து உள் உணரும் மார்க்கம் போதிக்கும் ஞானாலயத்திற்கு வாரீர்! பதிவு செய்ய அழைப்பீர்  89405 96665 மேலும் தகவலுக்கு https://enlightenedbeings.org முகவரி: ஞானாலயம், 27, ஜீவா தெரு, முத்திரையர் பாளையம், பாண்டிச்சேரி


எமது ஆத்ம் விடுதலை நிகழ்வு பற்றி அறிய https://docs.google.com/document/d/1WDCMTdEOxX4QeNGrjgIX4MHAI1cUEXGyFPbWsN7nJx0/edit



Wednesday, November 18, 2020

ஆத்மவிடுதலை அளிப்பீர்!

நீங்களும் ஆத்ம விடுதலை அளியுங்கள்: நாளை 9.30 மணிக்கு மேல் திருவோண நட்சத்திரம். தயவுசெய்து நமது சூட்சும குரு அகத்தியர் ஐயா கூறியவாறு, சென்ற மாதம் செய்த திருவோண பூஜையை செய்து தவிக்கும் பல கோடி உயிர்களுக்கு முக்தி அளித்திடுங்கள். 🙏🙏🙏🙏 அமைதி, ஆற்றல் நம்முள் அதிகரித்து வெளியிலும் பரவுவதை உணரலாம். பூஜை முறை மற்றும் காரணங்கள்: http://aarumugaththambiran.blogspot.com/2020/10/blog-post.html?m=1

Friday, October 23, 2020

உயிர்களுக்கு முக்தி அளியுங்கள்!

 இன்று திருவோண நட்சத்திரம். இது உயரிய நட்சத்திரம் ஆகும். உயிர்களைக் காக்கும் பெருமாளுக்கு உரியது. 

உடல் இருக்கும் போது எண்ணங்கள் நமை பல்வேறு விதமாக அலைகழிப்பதை  அறிவோம். அலைகழிக்கப்பட்ட எண்ணங்களுடன் உயிர் துறந்தவர்கள் உடலில்லா நிலையில், தவிக்கும் தவிப்பு கொடுமையானது. அவர்கள் அமைதியுற ஒரு எளிய பூஜை முறையை எல்லா மாதமும் 


திருவோண நட்சத்திரத்தன்று செய்ய அகத்தியபெருமானால்  ஜீவநாடியில் அருளப்பட்டது உள்ளது. 

இதனை உளப்பூர்வமாக நம்பிக்கையுடன் செய்ய பல உயிர்கள் அமைதியுற்று திருவோண நட்சத்திர ஒளியுடன் முருகப்பெருமான் எனும் செம்பு ஒளியின் உந்தலால் நீர்த் தன்மையுடைய காப்பவரான மகாவிஷ்ணுவை துளசி எனும் காந்த ஆற்றலால் அடைந்து பச்சைக் கற்பூர வாயுவால் கரைந்து அடைந்து, பின் ஈசனை அடையும்

தயவுசெய்து பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு முக்தி அளியுங்கள். உங்கள் ஆன்மபலமும் கூடும். வாழ்வில் ஏற்றங்கள் ஏற்படும்.

திருவோண பூஜை

பெருமாளிடம், "அகத்தியர் உத்தரவின் பேரில் இதை செய்கிறோம். இதை ஏற்றுக்கொண்டு அனைத்து ஜீவ ராசிகளுக்கும், மோக்ஷத்தை அருளிட வேண்டும்" என வேண்டிக் கொள்ளவேண்டும்.

 ஒரு செம்பு பாத்திரத்தில் நீர்விட்டு, அதில், சிறிது துளசி, சிறிது மஞ்சள்பொடி, சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து, வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து, வலதுகையை அந்த நீரில் மேலாக வைத்து "ஓம் ஸ்ரீ மாய மாலனே நமஹ" என 108 முறை ஜெபித்து, பின்னர் அந்த நீரை பூமியில்/மண் தரையில் விட்டுவிடவேண்டும். 

நீர் விடும் பொழுதும் "அகத்தியர் உத்தரவின் பேரில் இதை செய்கிறோம். இதை ஏற்றுக்கொண்டு அனைத்து ஜீவ ராசிகளுக்கும், மோக்ஷத்தை அருளிட வேண்டும்" என வேண்டிக் கொள்ளவேண்டும். 

நாம் பூமியில் விடும் தீர்த்தத்தை/பிரார்த்தனையை ஏற்று சென்று, இறைவனிடம் அவ்வுயிர்களுக்கு மோக்ஷத்தை வழங்க அகத்தியப்பெருமான் செய்வார். 

பிரார்த்திப்பவர் வாழ்வும் சிறப்பாக மேம்படும் என்ற அருள்வாக்கும் நல்கியுள்ளார் அகத்தியம்பெருமான்.

தவறாது உயிர்களுக்கு விடுதலை அளியுங்கள்!

பூஜை முறை siththanarul blog.





Saturday, February 15, 2020

சண்முக கவசம்

                                                ஓம்


முழு முதல் பரம்பொருள் முருகனே என்று தெளிந்து உணர்ந்து அப்பரம்பொருள் மீது ‘ஆறாயிரத்து அறநூற்று அறுபத்தாறு” பாடல்களை அருளிச்செய்து ஆறு மண்டலங்களாக வகுத்து சிவனருள் கலைகளஞ்சியம் என்று போற்றத்தக்க வகையில் முருகனைப் புகழ்கிறார் பாம்பன்குமரகுருதாச சுவாமிகள்.


ஆறு ஆதாரங்களில் ஆறு படை வீடுகளின் திருவிளையாடளையும் காணு கின்ற வல்லமையைக் கூட்டும் “ஆறெழுத்து திருமந்திரம்” எவ்வளவு உயர்ந்தது; உன்னதமானது உயர்வு தன்மை உடையது; உள்ளத்தி லும் உணர்விலும் ஓங்கி வளர்வது; என்றெல்லாம் தபோதனர்கள் சிந்திக்கின்றார்கள்.

திருவாறெழுத்து திருமந்திரம் நினைத்தால் மனத்தூய்மை தரும்; சொன்னால் வாக்கு வளம் கூடும்; கேட்டால் செவி இனிக்கும்; படித்தால் பற்பல பயன்கள் கூடும்.

மந்திரங்களில் தலைசிறந்தது திருவாறெழுத்து மந்திரம் இதனை வலியுறுத்தி சுவாமிகள் அகச் சான்று, புறச்சான்று, அனுபவித்து, நிரூபித்து, அருள் தன்மையால் விளக்கி, குமார பரமேஸ்வரனின் திருநாம மகிமையை குறிப்பிட்டுள்ளது. ‘அகரம் முதல் னகரம்’ வரை முப்பது எழுத்துக்கள் 30 பாடல்களால் அருளிச்செய்த இக்கவசம் மகாமந்திர சக்தியுடையது என்பதற்கு ஓர் சான்று ‘ஓம் ஐம் ரீம்வேல் காக்க என்று குறிப்பிட்டுள்ளது. வேலின் திறத்தை நன்கு விளக்கி உயிர்களை காக்க வேண்டுமென்று பிராத்தனை செய்த குருநாதரின் உள்ளக்கிடக்கை எவ்வாறு வர்ணிப்பது.
 

சண்முகக் கவசத்தை தொடங்குகின்ற பொழுது ‘அண்டமாய் அவனியாகி’ என்று தொடங்குகின்ற பாங்கு ‘அண்டம்’ என்பது விண், வெளி, தகனம், விசும்பு, உலகம் என்று பலபொருள்படும்.
“ஆகாயம்” என்ற வெட்டவெளி தன்மையதாகவும் குறிப்பிடலாம்.

‘அண்டமாய்’ என்று தொடங்குவது – அண்டத்தின் தேவலோகத்து தெய்வயானைப் பிராட்டியை முன்னே வைத்து பாடியதாகும்.

அருணகிரியார், “முத்தைத் தருபத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண” என்று தெய்வயானைப் பிராட்டியை முதலில் வைத்து பாடியதைப் பின்பற்றி “அண்டமாய்” என்றார்.


அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அண்டமாய் அவனி யாகி
அறியொணாப் பொருள தாகித்
தொண்டர்கள் குருவு மாகித்
துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற
என்னருள் ஈச னான
திண்டிறல் சரவ ணத்தான்
தினமும்என் சிரசைக் காக்க. 1
ஆதியாம் கயிலைச் செல்வன்
அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான்
தான்இரு நுதலைக் காக்க !
சோதியாம் தணிகை யீசன்
துரிசிலா விழியைக் காக்க !
நாதனாம் கார்த்தி கேயன்
நாசியை நயந்து காக்க ! 2
இருசெவி களையும் செவ்வேள்
இயல்புடன் காக்க ! வாயை
முருகவேல் காக்க! நாப்பல்
முழுதுநல் குமரன் காக்க !
துரிசறு கதுப்பை யானைத்
துண்டனார் துணைவன் காக்க !
திருவுடன் பிடரி தன்னைச்
சிவசுப்ர மணியன் காக்க ! 3
ஈசனாம் வாகு லேயன்
எனதுகந் தரத்தைக் காக்க !
தேசுறு தோள்வி லாவும்
திருமகள் மருகன் காக்க !
ஆசிலா மார்பை ஈராறு
ஆயுதன் காக்க; என்றன்
ஏசிலா முழங்கை தன்னை
எழில்குறிஞ் சிக்கோன் காக்க ! 4
உறுதியாய் முன்கை தன்னை
உமையிள மதலை காக்க;
தறுகண் ஏறிடவே என்கைத்
தலத்தைமா முருகன் காக்க;
புறங்கையை அயிலோன்காக்க;
பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்குமால் மருகன் காக்க;
பின்முது கைச்சேய் காக்க. 5
ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை
ஊர்தியோன் காக்க; வம்புத்
தோள்நிமிர் கரேசன் உந்திச்
சுழியினைக் காக்க; குய்ய
நாணினை அங்கி கெளரி
நந்தனன் காக்க; பீஜ
ஆணியைக் கந்தன் காக்க;
அறுமுகன் குதத்தைக் காக்க. 6
எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு
இறைவனார் காக்க காக்க;
அஞ்சகனம் ஓரி ரண்டும்
அரன்மகன் காக்க காக்க;
விஞ்சிடு பொருட்காங் கேயன்
விளரடித் தொடையைக் காக்க;
செஞ்சரண் நேச ஆசான்
திமிருமுன் தொடையைக் காக்க. 7
ஏரகத் தேவன் என்தாள்
இருமுழங் காலும் காக்க;
சீருடைக் கணைக்கால் தன்னைச்
சீரலை வாய்த்தே காக்க;
நேருடைப் பரடுஇ ரண்டும்
நிகழ்பரங் கிரியன் காக்க;
சீரிய குதிக்கால் தன்னைத்
திருச்சோலை மலையன் காக்க. 8
ஐயுறு மலையன் பாதத்
தமர்பத்து விரலும் காக்க;
பையுறு பழநி நாத
பரன்அகம் காலைக் காக்க;
மெய்யுடல் முழுதும் ஆதி
விமலசண் முகவன் காக்க;
தெய்வ நாயக விசாகன்
தினமும்என் நெஞ்சைக் காக்க. 9
ஒலியெழ உரத்த சத்தத்
தொடுவரு பூத ப்ரேதம்
பலிகொள் இராக்க தப்பேய்
பலகணத்து எவையா னாலும்
கிளிகொள எனைவேல் காக்க;
கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம்
வருந்திடாது அயில்வேல் காக்க ! 10
ஓங்கிய சீற்ற மேகொண்டு
உவணிவில் வேல்சூ லங்கள்
தாங்கிய தண்டம் எஃகம்
தடிபரசு ஈட்டி ஆதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர்
என் மேலே ஒச்சின்
தீங்குசெய் யாமல் என்னைத்
திருக்கைவேல் காக்க காக்க ! 11
ஒளவியம் உளர், ஊன் உண்போர்
அசடர், பேய், அரக்கர், புல்லர்,
தெவ்வர்கள் எவரா னாலும்
திடமுடன் எனைமல் கட்டத்
தவ்வியே வருவார் ஆயின்
சராசரம் எலாம்பு ரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன்
கைஅயில் காக்க காக்க ! 12
கடுவிடப் பாந்தள் சிங்கம்
கரடிநாய் புலிமா யானை
கொடிய கோள்நாய் குரங்கு
கோலமார்ச் சாலம் சம்பு
நடையுடை எதனா லேனும்
நான்இடர்ப் பட்டி டாமல்
சடுதியில் வடிவேல் காக்க;
சானவி முளைவேல் காக்க ! 13
ஙகர மேபோல் தமீஇ
ஞானவேல் காக்க ! வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி
செய்யன்ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஒந்தி பூரான்
நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவற்றால் எற்குஓர்
ஊறிலாது ஐவேல் காக்க. 14
சலத்தில்உய் வன்மீன் ஏறு
தண்டுடைத் திருக்கை மற்றும்
நிலத்திலும் சலத்தி லும்தான்
நெடுந்துயர் தரற்கே யுள்ள
குலத்தினால் நான்வ ருத்தம்
கொண்டிடாது அவ்வவ் வேளை
பலத்துடன் இருந்து காக்க;
பாவகி கூர்வேல் காக்க. 15
ஞமலியம் பரியன் கைவேல்
நவக்கிர கக்கோள் காக்க;
சுமவிழி நோய்கள் தந்த
சூலை ஆக்கிராண ரோகம்
திமிர்கழல் வாதம் சோகை
சிரம்அடி கர்ண ரோகம்
எமையணு காம லேபன்
னிருபுயன் சயவேல் காக்க. 16
டமருகத்து அடிபோல் நைக்கும்
தலையிடி கண்ட மாலை
குமுறுவிப் புருதி குன்மம்
குடல்வலி ஈழை காசம்
நிமிரொணாது இருத்தும் வெட்டை
நீர்ப்பிர மேகம் எல்லாம்
எமையடை யாம லேகுன்
நெறிந்தவன் கைவேல் காக்க. 17
இணக்கம் இல்லாத பித்த
எரிவுமா சுரங்கள் கைகால்
முணக்கவே குறைக்கும் குட்டம்
மூலவெண் முளைதீ மந்தம்
சணத்திலே கொல்லும் சன்னி
சாமென் றறையும் இந்தப்
பிணிக்குலம் எனைஆ ளாமல்
பெருஞ்சத்தி வடிவேல் காக்க. 18
தவனமா ரோகம் வாதம்
சயித்தியம் அரோச கம்மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு
இளைப்பு உடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோய்
அண்டவா தங்கள் சூலை
எனையும்என் இடத்தெய் தாமல்
எம்பிரான் திணிவேல் காக்க. 19
நமைப்புறு கிரிந்தி வீக்கம்
நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை
ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறுவ லிப்போடு
எழுபுடைப் பகந்த ராதி
இமைப்பொழு தேனும் என்னை
எய்தாமல் அருள்வேல் காக்க. 20
பல்லது கடித்து மீசை
படப டென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம்
காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி
எமபடர் வரினும் என்னை
ஒல்லையில் தார காரி
ஓம்ஐம் ரீம்வேல் காக்க ! 21
மண்ணிலும் மரத்தின் மீதும்
மலையிலும் நெருப்பின் மீதும்
தண்நிறை சலத்தின் மீதும்
சாரிசெய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும்
வேறெந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருளார் சஷ்டி
நாதன்வேல் காக்க காக்க. 22
யகரமே போல்சூ லேந்தும்
நறும்புயன் வேல்முன் காக்க,
அகரமே முதலாம் ஈராறு
அம்பகன் வேல்பின் காக்க,
சகரமோடு ஆறும் ஆனோன்
தன்கைவேல் நடுவில் காக்க,
சிகரமின் தேவ மோலி
திகழ்ஐவேல் கீழ்மேல் காக்க. 23
ரஞ்சித மொழிதே வானை
நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல்கி ழக்கில்
திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையின் ஞான
வீரன்வேல் காக்க; தெற்கில்
எஞ்சிடாக் கதிர்கா மத்தோன்
இகலுடைக் கரவேல் காக்க. 24
லகரமே போல்கா ளிங்கன்
நல்லுடல் நெளிய நின்று
தகரமர்த் தனமே செய்த
சங்கரி மருகன் கைவேல்
நிகழெனை நிருதி திக்கல்
நிலைபெறக் காக்க; மேற்கில்
இகல்அயில் காக்க, வாயு
வினில்குகன் கதிர்வேல் காக்க. 25
வடதிசை தன்னில் ஈசன்
மகன்அருள் திருவேல் காக்க;
விடையுடை யீசன் திக்கில்
வேதபோதகன்வேல் காக்க;
நடக்கையில் இருக்கும் ஞான்றும்
நவில்கையில் நிமிர்கையில் கீழ்க்
கிடக்கையில் தூங்கும் ஞான்றும்
கிரிதுளைத் துளவேல் காக்க. 26
இழந்து போகாத வாழ்வை
ஈயும் முத்தையனார் கைவேல்
வழங்கும் நல்லூண் உண்போதும்
மால்விளை யாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம்
பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
செழுங்குணத் தோடே காக்க;
திடமுடன் மயிலும் காக்க. 27
இளமையில் வாலிபத்தில்
ஏறிடு வயோதி கத்தில்
வளர்அறு முகச்சி வன்தான்
வந்தெனைக் காக்க காக்க.
ஒளியெழு காலை முன்எல்
ஓம்சிவ சாமி காக்க.
தெளிநடு பிற்ப கல்கால்
சிவகுரு நாதன் காக்க. 28
இறகுடைக் கோழித் தோகைக்கு
இறைமுன் இராவில் காக்க;
திறலுடைச் சூர்ப்ப கைத்தே
திகழ்பின் இராவில் காக்க;
நறவுசேர் தாள்சி லம்பன்
நடுநிசி தன்னில் காக்க;
மறைதொழு குழகன் எம்கோன்
மாறாது காக்க காக்க. 29
இனமெனத் தொண்ட ரோடும்
இணக்கிடும் செட்டி காக்க;
தனிமையில் கூட்டந் தன்னில்
சரவண பவனார் காக்க;
நனியனு பூதி சொன்ன
நாதர்கோன் காக்க; இத்தைக்
கனிவொடு சொன்ன தாசன்
கடவுள்தான் காக்க வந்தே. 30


Monday, September 2, 2019

வன ஈசன் எழுந்தருளும் திருநாள்!

அகத்தீசனடி போற்றி!!!

வன ஈசன் பாண்டிச்சேரி ஞானாலயத்தில் 1000 வருடங்களுக்கு பின் எழுந்தருளும் திருநாள்... ஒன்றிணைவோம் ஈசனுடன்... வாரீர்....

Friday, August 30, 2019

முருகப்பெருமான் தலைமையேற்கும் வாழ்வியல் நூல் வெளியீட்டு விழா


அகத்தீசனடி போற்றி!!

பேராற்றல்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் பாண்டிச்சேரி ஞானாலயத்தில் வருகின்ற 8.9.2019 அன்று  இவ்வருடத்தின் கடைசி ஆறுமுகனார் தீட்சை வழங்கப்பட உள்ளது. எட்டாவது வட்ட மலர்களுக்கான முதல் கட்ட தீட்சையாக இது இருக்கும். அதற்கு 
அடுத்து வரும் முழுநிலவு நாளான வெள்ளிக்கிழமை 13.9.2019  அன்று மாலை  5.30 மணியிலிருந்து 8 மணி வரை  முருகப்பெருமானே நேரடியாக தலைமை ஏற்று  கலியுக மக்கள் வாழ்க்கை முறை எவ்வாறெல்லாம் இருக்கவேண்டும் என கூறும் வாழ்வியல் என்னும் நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் (The Science and Purpose of Life) வெளிவரவுள்ளது.
அன்று மிக உன்னத தெய்வீக நிகழ்வுகள் நடக்க உள்ளது. அனைவரும் தவறாது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உன்னத அனுபவங்கள் பெற்றிடுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Friday, May 17, 2019

ஆதவ/சூரிய தரிசன உன்னத அனுபவங்கள்

ஆதவ/சூரிய தரிசன உன்னத அனுபவங்கள்

கடந்த 2018 நவம்பர் மாதத்தில் ஆதவ வழிபாடு குறித்து முருகப்பெருமான் அரசாட்சி புரியும் பாண்டிச்சேரி ஞானாலயத்தின் யூடியூப் காணொலி மூலம் அறிந்து இறையருளால் உடனே செயல்படுத்த ஆரம்பித்தேன்.

2018 கார்த்திகை மாதத்தில் தொடங்கிய ஆதவ வழிபாடு பல தெளிவுகளையும் அகவாழ்வு இகவாழ்வு ஏற்றங்களையும் தந்து கொண்டு உள்ளது.

ஈசனை விரைந்து அடையவும் ஒளியுடல் பெறவும், அகக்கண் திறந்து சிறந்த மாமனிதராய் வாழவும் சூரிய தரிசனமே மிகச் சிறந்த வழி.

ஞானாலய புத்தகமான பாரத்வாஜ மகரிஷிகள் அருளிய ஆகம வேதமும் வால்மீகி மற்றும் அகத்திய மகரிஷிகளின் கலியுக காவியம் - ஆத்மாவின் சுயசரிதமும்



ஆதவ தரிசனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த அவரைப் பார்க்கும் நேரம் ஒவ்வொரு நாளும் அதிகரித்தது.

செந்நிறக்கதிரோன் உதித்த நேரம் அவரைக் கண்டு நீர் எடுத்து "எனக்கு பரிபூரண ஞானத்தை தந்தருளுங்கள்" என உள் உருக ஒன்றி வேண்டி நீரினை நிலம் விடுத்து ஆதவ மையத்தினை தரிசிக்க ஆரம்பித்தல் வேண்டும்.
முதல் நாள் ஈச அலைகள் அதிகம் வரும் முதல் 24 நிமிட   நேரத்தில் ஆதவக் கதிர் அளிக்கும் உள் முக ஏற்றங்களை உணர ஆரம்பித்தேன்.
அடுத்தடுத்த  நாள் அந்தி சந்தியில் நிமிடங்களை அதிகப்படுத்த பல அற்புதங்கள் உள் நிகழ ஆரம்பித்தது. இது 1.20 மணி நேரம் வரை சென்றது, அதற்கு மேல் பார்த்தால் வெப்ப ஆற்றலே உள் புகும்.

ஆதார சக்கரங்கள் ஒளிவெள்ளத்தால் நிரம்பி பரவுவதையும் உடல் நிலை சீரடைவதையும் கண்கள் பலமாவதையும் உணரலாம். ஒவ்வொரு செயலிலும் அகப்பார்வை மிகுந்து செயல்படுவதை உணரலாம். மேலும்  பல தெளிவுகள் பொதுவில் குறித்திட இயலாது.  உணர்ந்து அனைவரும் சீரடைந்திட வேண்டும்.

மேலும் ஆதவ ஒளி நேர்மறை உணவு (நேர்மறையை எதிர்மறையாக்கி அணுக்களுக்கு உணவாக்கும் ஆத்மா)  என்றால் முழு நிலவு என்பது ஆதவனுக்கு சமம். நேரடி உணவாகும் அணுக்களுக்கு. சிரசு உச்சி நஞ்சகன்று மெலிதாக இருக்கும் அன்று இந்நேரடி எதிர்மின்காந்த அலைகளைப் பெற முடியும்.  க. காவியம் அ-111.
எனவே முழுநிலவு ஒளியையும் 1-3 மணி நேரம் தரிசிக்க  தேகத்தில் மேற்குறிப்பிட்ட நிலைகள் விரைந்து ஏற்பட்டன.
மேலும் ஆழ்ந்த தெளிவு பெறவும் சிரசின் நிலை, அணுக்களின் நுண்நிலைகள் குறித்து அறியவும் மேற்குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கி பயனடையுங்கள். http://enlightenedbeings.org/books.php

ஆதவ வழிபாடு குறித்து சித்தர்கள் அருளிய செய்திகளை சகோதரி ஜெயந்தி ரவி அவர்கள்:


வருகின்ற ஜுன் மாதம் 9ம் தேதி ஆறுமுகனார் தீட்சை நடக்க உள்ளது. தொடர்ந்து மூன்று மாதங்கள் நடைபெற்று பின் பயிற்சியை ஒன்றி செய்ய அடுத்து வரும் ஐப்பசி பௌர்ணமியில் ஆறுமுகனார் தேர்ந்தெடுக்க ஆத்ம விடுதலை அடைந்து பிறவியில்லா பெறும்பேறு அடையலாம். தீட்சையில் கலந்து கொள்ள கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கவும்.


  

Friday, February 15, 2019

பொன்னும் பொன் போன்ற தேகம் பெற தங்க ஆனந்தக் களிப்பு

                            தங்க ஆனந்தக் களிப்பு 


       ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய தங்க ஆனந்த களிப்பு  அவரது பாடல் தொகுப்பில் 6ம் மண்டலத்தில் அமைந்துள்ளது.  இம்மை, மறுமை வறுமையை போக்கி அருட் செல்வத்தினையும் பொருட் செல்வத்தினையும் பெற சிவ சுப்ரமணியனின் பால் இயற்றப்பட்ட தங்கமயமான துதி ஆகும். இது 10 பாடல்களை உடையது.  கர்மவினைகளை அழித்து செய் தொழிலில்  லாபத்தினை அளிக்கக்கூடியதாகும். மனதிற்கு அமைதியைத் தர வல்லது.  மனம் கடந்த அந்த அன்பின் ஊற்றாம் திருமுருகனைப் போன்ற பொன் தேகத்தினை, பிரணவ தேகத்தினை,  நிழல் விழா தேகத்தினைத் தரவல்லது.  SOUNDCLOUD LINK

இனி பாடல்....


சுயமான தங்கம் இத்தங்கம்  - சிவ
சுப்பிரமணியம் எனும் தெய்வத் தங்கம்

அந்தரர் வேண்டொரு தங்கம் -  ஈறில்
அருசிகரக்கிரி நின்றெழு தங்கம்
சுந்தரமாய்ச் சுடர் தங்கம்  - உமை
துங்க மலர்க் கரந் தங்கொரு தங்கம்             1

வேதத்திலே உள்ளத் தங்கம் -  சுத்த
வித்தை சொல் ஆகம நித்தியத் தங்கம்
நாதத்தின் மேலுள்ளத் தங்கம்  - அந்த
நாதம் கடந்தபின் நாம் அடை தங்கம்            2

பார்ப்பவர்க் கின்புசெய் தங்கம்  - சிவ
பாக்கியமெலாம் பகுக்கின்ற தங்கம்
சீர் பரதத்துவத் தங்கம்  -  நிறை
சிற்பர தேஜோமய ஆனந்தத் தங்கம்              3

நினைப்பவர்க் கின்பு செய்த் தங்கம் -  தொண்டர்
நெஞ்செனும் பேழையிலே நிறை தங்கம்
வினைப் பவம்வெல் பசுந் தங்கம்   - ஞான
விளைவற்ற பூமியில் புதைபட்ட தங்கம்      4

வாதிகட்கு எட்டாத தங்கம்   -  அன்பு
வறண்டலைவோர் அறியா வருந்தங்கம்
தீதிகற் சூழ்களை தங்கம்  -  தவச்
செல்வர்க்கு செல்வமதாந் திருத் தங்கம்              5

அஞ்செனத் தெட்டாதத் தங்கம்   -  பத்தி
யஞ்செனத் தேயெட்டும் அற்புதத் தங்கம்
செஞ்செயத் தைத்தரு தங்கம்     -  சிவ
சித்தர்கள் யோகிகள் மெச்சிடு தங்கம்                   6

மாற்றில் உயர்ந்தொளிர் தங்கம்  -  எல்லா
மங்கும் படிக்கருள் செய்தனித் தங்கம் 
ஆற்றலின் மேம்படு தங்கம்          -   பகி
ரண்டமெல்லாம் விலை கொண்டுயர் தங்கம்    7

அளவைக் கடங்காத தங்கம் - தினம்
அனலிட் டுருக்கினும் உருகாத தங்கம்
களவுக் கிணங்காத தங்கம்   -  தன்னைக்
காமுறுவார் மிடிதீர்க்கின்ற தங்கம்                        8 

யாதனையைத் தெரு தங்கம்    -   தெய்வ
யானை விழிக்கிதமாய் அவிர் தங்கம்
ஏதனையா  நறுந் தங்கம்  எழில்
ஏனலினோர் கொடிதான் படர் தங்கம்                   9


ஞான விண்ணாகின்ற தங்கம்   -  நல
நல்குந்திருப்புக ழோன் கண்ட தங்கம்
வானவர் மாமுடித் தங்கம்          -  நம்மை
வாழ்விக்க வந்த பராபரத்   தங்கம்                         10


பொருள்;    ஏனலினோர் *   தினைப்புனம் ( தினை விளையும் மலை) காப்போர்


Thursday, September 20, 2018

முருகனின் வேல் மயில் சூரசம்ஹாரம் என்பதன் மறைபொருள்

முருகனின் வேலும் மயிலும் சூரசம்ஹாரமும் என்றால் என்ன?  முதலில் அசுரர்கள் யார் என்பதைக் காண்போம்..

இந்த அசுரர்கள் யார் என்று வள்ளலார் விளக்குகிறார்.
 பத்மாசுரன் என்பது அவா,
கஜமுகன் என்பது மதம்,
சிங்கமுகன் என்பது மோகம்.
 இந்த மூன்றையும் ஐந்தறிவால் வெல்ல முடியாது.  ஆறாவது அறிவு அல்லது பகுத்தறிவு அல்லது கூர்மையான வேலால் ஐந்து சக்திகள் சுத்த ஞானம், சுத்த கிரியா ஆகியவற்றின் உதவியுடன் வெல்லவேண்டும்.

.  மேற்கூறிய மூன்று குணங்களும் அழிக்கப்பட்டாலும் அவற்றின் வாசனை அல்லது சுவடு எளிதில் நீங்குவதில்லை.  அந்த வாசனை சமயம் கிடைக்கும்போது மயில் தோகையை விரித்து ஆடுவதைப் போல பரந்து விரிகிறது.  தனது அழகால் தோகை நம்மை மயக்குவதைப் போல நம்மை மதியிழக்கச் செய்கிறது.

மயில் 
மயில் என்பது வாசி (இடகலை, பிங்கலை சுவாசம்). எனும் வாகனம்.  இந்த மயிலின்மேல் முருகன் இருப்பது என்பது பகுத்தறிவு அல்லது விழிப்புணர்வு இந்த வாசனை அல்லது விகல்ப ஜாலத்தைத் தனது கட்டுக்குள் வைத்திருப்பது.  

முருகனின் தண்டாயுதம் என்றால் என்ன?

 தண்டம் என்பது குண்டலினி சக்தி ஏறும் சுழுமுனை நாடி.
அது முருகன் அல்லது பரவுணர்வின் கட்டுப்பாட்டில் உள்ளது.  அதைத் தான் தண்டாயுதபாணி, வேலன் என்பது.

குமரகுருபரன்:

குமரன் என்பது கு என்னும் அஞ்ஞான இருட்டை மரிக்கச் செய்தவன், கொன்றவன் என்று பொருள்.  அவனே குரு.  அவன் உச்ச நிலையான பர நிலையில் இருப்பவன்.  அதனால் அவன் குமரகுரு பரன்.
ஆதி அந்தம் என்பது பிறப்பிறப்பையும்
அநாதி அந்தம் என்பது உச்ச முடிவான என்னும் நிலைத்திருக்கும் பரவுணர்வு நிலையையும் குறிக்கும்.
 இந்த இரண்டு நிலையும் மாயையைக் கொன்றால் ஏற்படும் என்று கூறும் சுப்பிரமணியர் அதனால்தான் தனக்கு குமரகுரு பரன் என்று பேர் ஏற்பட்டது என்கிறார்.
பொதுவாக குமரகுருபரன் என்று நாம் கூறும் பெயரை சுப்பிரமணியர் பாடலுக்காக குமரகுரு பரன் என்று பிரித்தது நமக்கு அவரது மூன்றுவித தன்மைகளைக் காட்டுகிறது!

சரியை என்பது கோவிலுக்குப் போவது விளக்கேற்றுவது போன்ற காரியங்களைச் செய்து வெளியில் இறைவனிடம் பக்தி செலுத்துவது.
  கிரியை என்பது மனதுள் இடைவிடாமல் இறைவனிடம் அன்பு செலுத்துவது.  யோகம் .
அதன் முடிவில் பெறுவது ஞானம்.. ஞானமே என்றும் அழியாமல் இருக்கும் விளக்கான ஆத்ம ஜோதி.- அது ஞான ஜோதி-  அறிவால் ஏற்படுவது. சுப்பிரமணியரே பூரணத்தைப் பற்றிய அறிவை, பரவுணர்வை நமக்கு அருளுபவர். சுப்பிரமணியர் என்பது பகுத்தறிவு.

சூரசம்காரத்தின் மறைபொருள்

திருப்பரங்குன்றம்    - மூலாதாரம்,
திருச்செந்தூர்             - சுவாதிஷ்டானம்,
பழனி                              - மணிபூரகம்,
சுவாமி மலை             - அனாகதம்,
திருத்தணிகை           - விசுத்தி மற்றும்
 பழமுதிர் சோலை   - ஆக்கினை சக்கரத்தையும் குறிக்கின்றன.
 சுப்பிரமணியர் ஷட் அக்ஷரங்களை, ஆறு எழுத்துக்களை, இந்த படைவீடுகளில் உறுதியாகப் பதிக்கவேண்டும் என்கிறார். நமது ஆக்னையில் ஒரு ஆறு பட்டையான மணி ஒளிவிட்டுக்கொண்டு இருக்கிறது.  இந்த ஜோதியே ஷண்முகன்.


உடலில் உள்ள சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தைக் குறிக்கின்றது.  இவற்றை ஒரு யோகி கடக்கிறார் என்றால் அந்த தத்துவம் ஏற்படுத்தும் பிரிவினையைக் கடக்கிறார், அசுரரை வெல்கிறார் என்று பொருள்.
இறைவனின தில்லை நடனம்  ஆன்மாக்களின் ஆணவத்தை அழிப்பதைக் குறிக்கிறது.  இந்தக் கூத்தை ஒருவர் குண்டலினி யோகத்தின் உச்சிநிலையில் காண்கிறார்.  இந்த உச்ச நிலை அன்புநிலை. இந்த நிலையைத் தான் பச்சை மயில் ஏறி, வாசியின் மூலம், அடையப் பாய்கிறேன் என்கிறார் சுப்பிரமணியர்.  வாலை அல்லது குண்டலினியின் நிறம் பச்சை என்று சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள்.

 சஹஸ்ராரம் என்பது உயிர்களின் லய நிலை, பிறவியற்ற நிலை.  ஐங்காயம் என்பது பஞ்ச கோசம் அல்லது மாயையால் விளைந்த உடல்களைக் குறிக்கிறது.  இந்த உடல்களுக்குக் காரணமான மாயை ஒடுங்கும் இடம் சஹஸ்ராரம். சஹாஸ்ராரத்தில் அனைத்தும் பரவுணர்வாக எவ்வித குணமும் இல்லாமல், வேறுபாடும் இல்லாமல் இருப்பது.    செத்தும் சாகாமல் இருக்கும் இடம் பரவுணர்வு நிலை.   உயிர் உடலினுள் நுழைவது சஹாஸ்ராரத்தின் மூலம்தான்.  அதனால்தான் பிறந்த குழந்தைகளின் மண்டையோடு ஒரு விரிசலை உடையதாக உள்ளது.  அந்தக் குழந்தை வளர்ந்து மண்டையோடு உறுதியானதாக மாறும்போது இந்த விரிசல் மூடிவிடுகிறது.  சஹாஸ்ராரத்தில் குருபாதம் காணக்கிடைகிறது.  இந்த சஹஸ்ராரம் பேசாத எழுத்தாக, “ம்” என்னும் எழுத்தாக இருக்கிறது என்கிறார் சுப்பிரமணியர்.
சரவணபவ என்ற மந்திரத்தில்

 முதல் இரண்டு எழுத்துக்கள் சர      - குமார பீஜம் என்றும்
அடுத்த இரு எழுத்துக்கள்        வண -  சக்தி பீஜம் என்றும்
 கடைசி இரு எழுத்துக்கள்       பவ    -  சிவ பீஜம் என்றும் குறிப்பிடப்படுகின்றன.
 இந்த ஆறு எழுத்துக்களும் தூய்மை, செல்வம், ஒளி, மங்களம், பெருமை மற்றும் அளவற்ற ச்கதியைக் குறிக்கும்.


ஆறுமுகன்

முருகனின் ஆறு முகங்களில்
ஐந்து முகங்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் என்ற செயல்களையும்
ஆறாவது முகம் ஞானத்தையும் குறிக்கின்றன.
வள்ளி தெய்வயானை மற்றும் வேலுடன் அவர் காணப்படுவது இச்சா, கிரியா ஞான சக்திகளைக் குறிக்கிறது.
அவர் மயிலின் மேல் காணப்படுவது அவர் மாயையைக் கடந்தவர் என்பதையும் வாசியை வழிநடத்தி திருக்கூத்தனின் உச்ச நிலையான அன்பு நிலையுடன்  இணைய வைப்பவன் என்றும் கொடியில் உள்ள சேவல் அவர் நாதப் பிரம்மம், மற்றும் காலத்தைக் கடந்தவர் என்பதையும் குறிக்கின்றன.  (சேவலின் கூவல் பகல் இரவு என்ற காலத்தின் பிரிவைக் குறிப்பிடுகிறது).

எனவே மெய்ப்பொருள் உணர்ந்து பற்ற வேண்டுவதைப் பற்றி அன்பு நிலை அடைவோம்!

Tuesday, September 11, 2018

சொரூப சித்தி அடைந்த ஆறுமுகத்தம்பிரான்


சொரூப சித்தி என்றால் என்ன? 

சித்தர்கள் 
இறைவனைக் காரணன் என்றும் ஜீவனைப் பூரணன் என்றும் கூறுகின்றனர்.  ஆத்மாவின் உண்மை நிலை பரிபூரணனாக இருப்பது.  ஏழு திரைகள் இவ்வுண்மையை மறைக்கின்றன.  அவை: 
மாயாசக்தி, 
கிரியா சக்தி, 
பரா சக்தி, 
இச்சா சக்தி, 
ஞான சக்தி, 
ஆதி சக்தி மற்றும் 
சித் சக்தி 
என்பவை.  இந்த ஏழு திரைகளையும் கடந்த ஆத்மா தனது உண்மையான நிலையை ஜோதி சொரூபத்தை உணர்ந்துகொள்கிறது.  அந்த உண்மைநிலையை மறைக்கின்ற.   இந்த ஏழு திரைகளையும் யோகத்தின் மூலம்  கிழித்தெறியலாம்.  

சுப்பிரமணியர் ஞானம்
சுப்பிரமணியரே பூரணத்தைப் பற்றிய அறிவை, பரவுணர்வை நமக்கு அருளுபவர். மணிப்பூரக சக்கரம் என்பது மாற்றம் ஏற்படுத்தும் சக்தி படைத்தது.  சுவாதிட்டானம் என்பது நமது சம்ஸ்காரங்கள் செயல்படுவதற்கு முந்தைய நிலையில் இருக்கும் இடம்.  இந்த இரு இடங்களையும் அகத்தியர் பரப்பிரம்மத்தைப் பற்றிய அறிவுடன் பார்க்கவேண்டும் என்கிறார். 

அறிவற்ற மனிதன் யார் என்றால் அவன் கங்கை என்பது லலாட சக்கரத்திலிருந்து கீழ் நோக்கி வரும் அமிர்தம் என்பதை அறியாமல் காசி நகரில் உள்ள நதிதான் அது என்று எண்ணி அதில் நீராடுபவன்.
அந்த அமிர்தம் ஆகாச கங்கை எனப்படுகிறது

நமது உடலில் இறைவன் வாயுவாகவும் ஜீவன் குண்டலினி அக்னியாகவும் இருக்கிறார்கள் என்று அகத்தியர் தனது சௌமிய சாகரத்தில் கூறுகிறார். 

எனவே வாசிதான் பலன் அனைத்தையும் கொடுக்கும் தெய்வம் என்பதை அறியாமல் கோயிலில் உள்ள சிலைகளைக் கும்பிடுபவன், உண்மையை அறியாது ஊர் ஊராகத் திரிபவன், ஞானம் தரும் என்று பல வழிகளின் பின்னே அலைபவன்.  இந்த உண்மைகளை தான் எவ்வளவு கூறினாலும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் அலைகின்றனர் என்று சுப்பிரமணியர் வருத்தத்துடன் கூறுகிறார். 

சொரூப சித்தி பெற்ற மகான்களின் தேகம் எவ்வாறு இருக்கும்? 

அருணாசல குருவின் நிஜானந்த போதம் என்ற நூலில் தச தீட்சையைப் பற்றிய விவரங்கள் உள்ளது. அவையாவன:
௧. உடலிலுள்ள கெட்ட நீர் அனைத்தும் வியர்வையாக வெளியேறும்
௨. முத்தோஷங்கலான வாதம், கபம், சிலோத்துமம் நீங்கும்.
௩. கெட்ட உதிரங்கள் கசியும்.
௪. சரீரத்தில் பாம்பு தோலை உரிப்பதைப் போல தோல் உரியும்.
௫. சட்டை கழன்று தேகம் சிவந்த நிறமாகும்.  
பஞ்ச மூர்த்திகள் வேண்டியதைத் தருவர், அதாவது, பஞ்ச பூதங்கள் வசத்துக்குள் வரும்.
௬. சட்டை கழன்று சுழுமுனை வாசல் திறக்கும், தொலைப்பார்வை கிட்டும்.
௭. சட்டை வெளுப்பாகக் கழன்று தேகம் தீபம் போல பிரகாசிக்கும்.
௮. சடலம் பாரமற்றதாகும், லாகிரி என்ற இன்ப நிலை ஏற்படும்.  கூடுவிட்டு கூடு பாயும் திறம் வாய்க்கும்,
௯. தேகம் சூரியனைப் போன்று பிரகாசிக்கும். 
பெரும் அஷ்டமா சித்தி கூடும். செயலற்ற நிலையான கைவல்யம் கிட்டும்.  
தேவர்கள் சேவை புரிவர்.
௧௦. தேகம் தீபம் போல பிரகாசிக்கும் அதைக் கத்தியாலும் வெட்ட முடியாது.  
இதுவே சொரூப சித்தி.  
அந்த யோகி இவ்வுலகில் மௌன நாளையில் நரை திரை, பிணி, மூப்பு, சாக்காடு இல்லாமல் வாழ்வார்.


மேற்கூறிய நிலையை எட்டிய யோகி தனது விழிப்புணர்வை இன்னும் விரிவாக்கி முப்பாழ் எனப்படும் சூனியத்தில் மூழ்கி தனது தனிப்பட்ட நிலையை இழப்பார்.  முப்பாழ் என்பவை மாயப்பாழ், போதப்பாழ், உபசாந்தப்பாழ் என்பவை.  இவை விழிப்புணர்வின் நிலைகளே.  இந்த நிலைகள் அனைத்தையும் கடந்த யோகி வீடு எனப்படும் பரவுணர்வு நிலையை அடைவார்.  

தனது விழிப்புணர்வை உடலில் உள்ள ஆறு சக்கரங்களுக்கும் மேலே உள்ள ஆறு ஆதாரங்களிலும் பயணிக்கச் செய்து உச்ச நிலையை அடைவார்.  இந்த நிலையை அடைந்தவருக்கு  பரவுணர்வும் பேரானந்தமும் கிட்டும்.
நன்றி: 
http://subramanyarjnanam.blogspot.com

நமது ஆறுமுகத் தம்பிரான் இச்சொரூப சித்தி அடைந்தவர் என்பது அகத்திய மகரிஷிகள் அருளிய வாக்கு. 

நாமும் இப்பேரானந்த நிலையை அடைய பூரணத்துடன் இணைந்து காரணத்துடன் ஒன்றுவோம் ஆறுமுகத்தம்பிரான் துணையுடன்!