Wednesday, November 18, 2020
ஆத்மவிடுதலை அளிப்பீர்!
Friday, October 23, 2020
உயிர்களுக்கு முக்தி அளியுங்கள்!
இன்று திருவோண நட்சத்திரம். இது உயரிய நட்சத்திரம் ஆகும். உயிர்களைக் காக்கும் பெருமாளுக்கு உரியது.
உடல் இருக்கும் போது எண்ணங்கள் நமை பல்வேறு விதமாக அலைகழிப்பதை அறிவோம். அலைகழிக்கப்பட்ட எண்ணங்களுடன் உயிர் துறந்தவர்கள் உடலில்லா நிலையில், தவிக்கும் தவிப்பு கொடுமையானது. அவர்கள் அமைதியுற ஒரு எளிய பூஜை முறையை எல்லா மாதமும்
திருவோண நட்சத்திரத்தன்று செய்ய அகத்தியபெருமானால் ஜீவநாடியில் அருளப்பட்டது உள்ளது.
இதனை உளப்பூர்வமாக நம்பிக்கையுடன் செய்ய பல உயிர்கள் அமைதியுற்று திருவோண நட்சத்திர ஒளியுடன் முருகப்பெருமான் எனும் செம்பு ஒளியின் உந்தலால் நீர்த் தன்மையுடைய காப்பவரான மகாவிஷ்ணுவை துளசி எனும் காந்த ஆற்றலால் அடைந்து பச்சைக் கற்பூர வாயுவால் கரைந்து அடைந்து, பின் ஈசனை அடையும்.
தயவுசெய்து பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு முக்தி அளியுங்கள். உங்கள் ஆன்மபலமும் கூடும். வாழ்வில் ஏற்றங்கள் ஏற்படும்.
திருவோண பூஜை
பெருமாளிடம், "அகத்தியர் உத்தரவின் பேரில் இதை செய்கிறோம். இதை ஏற்றுக்கொண்டு அனைத்து ஜீவ ராசிகளுக்கும், மோக்ஷத்தை அருளிட வேண்டும்" என வேண்டிக் கொள்ளவேண்டும்.
ஒரு செம்பு பாத்திரத்தில் நீர்விட்டு, அதில், சிறிது துளசி, சிறிது மஞ்சள்பொடி, சிறிது பச்சைக்கற்பூரம் சேர்த்து, வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து, வலதுகையை அந்த நீரில் மேலாக வைத்து "ஓம் ஸ்ரீ மாய மாலனே நமஹ" என 108 முறை ஜெபித்து, பின்னர் அந்த நீரை பூமியில்/மண் தரையில் விட்டுவிடவேண்டும்.
நீர் விடும் பொழுதும் "அகத்தியர் உத்தரவின் பேரில் இதை செய்கிறோம். இதை ஏற்றுக்கொண்டு அனைத்து ஜீவ ராசிகளுக்கும், மோக்ஷத்தை அருளிட வேண்டும்" என வேண்டிக் கொள்ளவேண்டும்.
நாம் பூமியில் விடும் தீர்த்தத்தை/பிரார்த்தனையை ஏற்று சென்று, இறைவனிடம் அவ்வுயிர்களுக்கு மோக்ஷத்தை வழங்க அகத்தியப்பெருமான் செய்வார்.
பிரார்த்திப்பவர் வாழ்வும் சிறப்பாக மேம்படும் என்ற அருள்வாக்கும் நல்கியுள்ளார் அகத்தியம்பெருமான்.
தவறாது உயிர்களுக்கு விடுதலை அளியுங்கள்!
பூஜை முறை siththanarul blog.
Saturday, February 15, 2020
சண்முக கவசம்
முழு முதல் பரம்பொருள் முருகனே என்று தெளிந்து உணர்ந்து அப்பரம்பொருள் மீது ‘ஆறாயிரத்து அறநூற்று அறுபத்தாறு” பாடல்களை அருளிச்செய்து ஆறு மண்டலங்களாக வகுத்து சிவனருள் கலைகளஞ்சியம் என்று போற்றத்தக்க வகையில் முருகனைப் புகழ்கிறார் பாம்பன்குமரகுருதாச சுவாமிகள்.
ஆறு ஆதாரங்களில் ஆறு படை வீடுகளின் திருவிளையாடளையும் காணு கின்ற வல்லமையைக் கூட்டும் “ஆறெழுத்து திருமந்திரம்” எவ்வளவு உயர்ந்தது; உன்னதமானது உயர்வு தன்மை உடையது; உள்ளத்தி லும் உணர்விலும் ஓங்கி வளர்வது; என்றெல்லாம் தபோதனர்கள் சிந்திக்கின்றார்கள்.
திருவாறெழுத்து திருமந்திரம் நினைத்தால் மனத்தூய்மை தரும்; சொன்னால் வாக்கு வளம் கூடும்; கேட்டால் செவி இனிக்கும்; படித்தால் பற்பல பயன்கள் கூடும்.
மந்திரங்களில் தலைசிறந்தது திருவாறெழுத்து மந்திரம் இதனை வலியுறுத்தி சுவாமிகள் அகச் சான்று, புறச்சான்று, அனுபவித்து, நிரூபித்து, அருள் தன்மையால் விளக்கி, குமார பரமேஸ்வரனின் திருநாம மகிமையை குறிப்பிட்டுள்ளது. ‘அகரம் முதல் னகரம்’ வரை முப்பது எழுத்துக்கள் 30 பாடல்களால் அருளிச்செய்த இக்கவசம் மகாமந்திர சக்தியுடையது என்பதற்கு ஓர் சான்று ‘ஓம் ஐம் ரீம்வேல் காக்க’ என்று குறிப்பிட்டுள்ளது. வேலின் திறத்தை நன்கு விளக்கி உயிர்களை காக்க வேண்டுமென்று பிராத்தனை செய்த குருநாதரின் உள்ளக்கிடக்கை எவ்வாறு வர்ணிப்பது.
சண்முகக் கவசத்தை தொடங்குகின்ற பொழுது ‘அண்டமாய் அவனியாகி’ என்று தொடங்குகின்ற பாங்கு ‘அண்டம்’ என்பது விண், வெளி, தகனம், விசும்பு, உலகம் என்று பலபொருள்படும்.
“ஆகாயம்” என்ற வெட்டவெளி தன்மையதாகவும் குறிப்பிடலாம்.
‘அண்டமாய்’ என்று தொடங்குவது – அண்டத்தின் தேவலோகத்து தெய்வயானைப் பிராட்டியை முன்னே வைத்து பாடியதாகும்.
அருணகிரியார், “முத்தைத் தருபத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண” என்று தெய்வயானைப் பிராட்டியை முதலில் வைத்து பாடியதைப் பின்பற்றி “அண்டமாய்” என்றார்.
அறியொணாப் பொருள தாகித்
தொண்டர்கள் குருவு மாகித்
துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற
என்னருள் ஈச னான
திண்டிறல் சரவ ணத்தான்
தினமும்என் சிரசைக் காக்க. 1
அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான்
தான்இரு நுதலைக் காக்க !
சோதியாம் தணிகை யீசன்
துரிசிலா விழியைக் காக்க !
நாதனாம் கார்த்தி கேயன்
நாசியை நயந்து காக்க ! 2
இயல்புடன் காக்க ! வாயை
முருகவேல் காக்க! நாப்பல்
முழுதுநல் குமரன் காக்க !
துரிசறு கதுப்பை யானைத்
துண்டனார் துணைவன் காக்க !
திருவுடன் பிடரி தன்னைச்
சிவசுப்ர மணியன் காக்க ! 3
எனதுகந் தரத்தைக் காக்க !
தேசுறு தோள்வி லாவும்
திருமகள் மருகன் காக்க !
ஆசிலா மார்பை ஈராறு
ஆயுதன் காக்க; என்றன்
ஏசிலா முழங்கை தன்னை
எழில்குறிஞ் சிக்கோன் காக்க ! 4
உமையிள மதலை காக்க;
தறுகண் ஏறிடவே என்கைத்
தலத்தைமா முருகன் காக்க;
புறங்கையை அயிலோன்காக்க;
பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்குமால் மருகன் காக்க;
பின்முது கைச்சேய் காக்க. 5
ஊர்தியோன் காக்க; வம்புத்
தோள்நிமிர் கரேசன் உந்திச்
சுழியினைக் காக்க; குய்ய
நாணினை அங்கி கெளரி
நந்தனன் காக்க; பீஜ
ஆணியைக் கந்தன் காக்க;
அறுமுகன் குதத்தைக் காக்க. 6
இறைவனார் காக்க காக்க;
அஞ்சகனம் ஓரி ரண்டும்
அரன்மகன் காக்க காக்க;
விஞ்சிடு பொருட்காங் கேயன்
விளரடித் தொடையைக் காக்க;
செஞ்சரண் நேச ஆசான்
திமிருமுன் தொடையைக் காக்க. 7
இருமுழங் காலும் காக்க;
சீருடைக் கணைக்கால் தன்னைச்
சீரலை வாய்த்தே காக்க;
நேருடைப் பரடுஇ ரண்டும்
நிகழ்பரங் கிரியன் காக்க;
சீரிய குதிக்கால் தன்னைத்
திருச்சோலை மலையன் காக்க. 8
தமர்பத்து விரலும் காக்க;
பையுறு பழநி நாத
பரன்அகம் காலைக் காக்க;
மெய்யுடல் முழுதும் ஆதி
விமலசண் முகவன் காக்க;
தெய்வ நாயக விசாகன்
தினமும்என் நெஞ்சைக் காக்க. 9
தொடுவரு பூத ப்ரேதம்
பலிகொள் இராக்க தப்பேய்
பலகணத்து எவையா னாலும்
கிளிகொள எனைவேல் காக்க;
கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம்
வருந்திடாது அயில்வேல் காக்க ! 10
உவணிவில் வேல்சூ லங்கள்
தாங்கிய தண்டம் எஃகம்
தடிபரசு ஈட்டி ஆதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர்
என் மேலே ஒச்சின்
தீங்குசெய் யாமல் என்னைத்
திருக்கைவேல் காக்க காக்க ! 11
அசடர், பேய், அரக்கர், புல்லர்,
தெவ்வர்கள் எவரா னாலும்
திடமுடன் எனைமல் கட்டத்
தவ்வியே வருவார் ஆயின்
சராசரம் எலாம்பு ரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன்
கைஅயில் காக்க காக்க ! 12
கரடிநாய் புலிமா யானை
கொடிய கோள்நாய் குரங்கு
கோலமார்ச் சாலம் சம்பு
நடையுடை எதனா லேனும்
நான்இடர்ப் பட்டி டாமல்
சடுதியில் வடிவேல் காக்க;
சானவி முளைவேல் காக்க ! 13
ஞானவேல் காக்க ! வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி
செய்யன்ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஒந்தி பூரான்
நளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை இவற்றால் எற்குஓர்
ஊறிலாது ஐவேல் காக்க. 14
தண்டுடைத் திருக்கை மற்றும்
நிலத்திலும் சலத்தி லும்தான்
நெடுந்துயர் தரற்கே யுள்ள
குலத்தினால் நான்வ ருத்தம்
கொண்டிடாது அவ்வவ் வேளை
பலத்துடன் இருந்து காக்க;
பாவகி கூர்வேல் காக்க. 15
நவக்கிர கக்கோள் காக்க;
சுமவிழி நோய்கள் தந்த
சூலை ஆக்கிராண ரோகம்
திமிர்கழல் வாதம் சோகை
சிரம்அடி கர்ண ரோகம்
எமையணு காம லேபன்
னிருபுயன் சயவேல் காக்க. 16
தலையிடி கண்ட மாலை
குமுறுவிப் புருதி குன்மம்
குடல்வலி ஈழை காசம்
நிமிரொணாது இருத்தும் வெட்டை
நீர்ப்பிர மேகம் எல்லாம்
எமையடை யாம லேகுன்
நெறிந்தவன் கைவேல் காக்க. 17
எரிவுமா சுரங்கள் கைகால்
முணக்கவே குறைக்கும் குட்டம்
மூலவெண் முளைதீ மந்தம்
சணத்திலே கொல்லும் சன்னி
சாமென் றறையும் இந்தப்
பிணிக்குலம் எனைஆ ளாமல்
பெருஞ்சத்தி வடிவேல் காக்க. 18
சயித்தியம் அரோச கம்மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு
இளைப்பு உடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோய்
அண்டவா தங்கள் சூலை
எனையும்என் இடத்தெய் தாமல்
எம்பிரான் திணிவேல் காக்க. 19
நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை
ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உறுவ லிப்போடு
எழுபுடைப் பகந்த ராதி
இமைப்பொழு தேனும் என்னை
எய்தாமல் அருள்வேல் காக்க. 20
படப டென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம்
காட்டியே உருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி
எமபடர் வரினும் என்னை
ஒல்லையில் தார காரி
ஓம்ஐம் ரீம்வேல் காக்க ! 21
மலையிலும் நெருப்பின் மீதும்
தண்நிறை சலத்தின் மீதும்
சாரிசெய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும்
வேறெந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருளார் சஷ்டி
நாதன்வேல் காக்க காக்க. 22
நறும்புயன் வேல்முன் காக்க,
அகரமே முதலாம் ஈராறு
அம்பகன் வேல்பின் காக்க,
சகரமோடு ஆறும் ஆனோன்
தன்கைவேல் நடுவில் காக்க,
சிகரமின் தேவ மோலி
திகழ்ஐவேல் கீழ்மேல் காக்க. 23
நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல்கி ழக்கில்
திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையின் ஞான
வீரன்வேல் காக்க; தெற்கில்
எஞ்சிடாக் கதிர்கா மத்தோன்
இகலுடைக் கரவேல் காக்க. 24
நல்லுடல் நெளிய நின்று
தகரமர்த் தனமே செய்த
சங்கரி மருகன் கைவேல்
நிகழெனை நிருதி திக்கல்
நிலைபெறக் காக்க; மேற்கில்
இகல்அயில் காக்க, வாயு
வினில்குகன் கதிர்வேல் காக்க. 25
மகன்அருள் திருவேல் காக்க;
விடையுடை யீசன் திக்கில்
வேதபோதகன்வேல் காக்க;
நடக்கையில் இருக்கும் ஞான்றும்
நவில்கையில் நிமிர்கையில் கீழ்க்
கிடக்கையில் தூங்கும் ஞான்றும்
கிரிதுளைத் துளவேல் காக்க. 26
ஈயும் முத்தையனார் கைவேல்
வழங்கும் நல்லூண் உண்போதும்
மால்விளை யாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம்
பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
செழுங்குணத் தோடே காக்க;
திடமுடன் மயிலும் காக்க. 27
ஏறிடு வயோதி கத்தில்
வளர்அறு முகச்சி வன்தான்
வந்தெனைக் காக்க காக்க.
ஒளியெழு காலை முன்எல்
ஓம்சிவ சாமி காக்க.
தெளிநடு பிற்ப கல்கால்
சிவகுரு நாதன் காக்க. 28
இறைமுன் இராவில் காக்க;
திறலுடைச் சூர்ப்ப கைத்தே
திகழ்பின் இராவில் காக்க;
நறவுசேர் தாள்சி லம்பன்
நடுநிசி தன்னில் காக்க;
மறைதொழு குழகன் எம்கோன்
மாறாது காக்க காக்க. 29
இணக்கிடும் செட்டி காக்க;
தனிமையில் கூட்டந் தன்னில்
சரவண பவனார் காக்க;
நனியனு பூதி சொன்ன
நாதர்கோன் காக்க; இத்தைக்
கனிவொடு சொன்ன தாசன்
கடவுள்தான் காக்க வந்தே. 30