ஆறுமுகத்தம்பிரான் பற்றி அறிய!

Monday, September 2, 2019

வன ஈசன் எழுந்தருளும் திருநாள்!

அகத்தீசனடி போற்றி!!!

வன ஈசன் பாண்டிச்சேரி ஞானாலயத்தில் 1000 வருடங்களுக்கு பின் எழுந்தருளும் திருநாள்... ஒன்றிணைவோம் ஈசனுடன்... வாரீர்....

Friday, August 30, 2019

முருகப்பெருமான் தலைமையேற்கும் வாழ்வியல் நூல் வெளியீட்டு விழா


அகத்தீசனடி போற்றி!!

பேராற்றல்களின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் பாண்டிச்சேரி ஞானாலயத்தில் வருகின்ற 8.9.2019 அன்று  இவ்வருடத்தின் கடைசி ஆறுமுகனார் தீட்சை வழங்கப்பட உள்ளது. எட்டாவது வட்ட மலர்களுக்கான முதல் கட்ட தீட்சையாக இது இருக்கும். அதற்கு 
அடுத்து வரும் முழுநிலவு நாளான வெள்ளிக்கிழமை 13.9.2019  அன்று மாலை  5.30 மணியிலிருந்து 8 மணி வரை  முருகப்பெருமானே நேரடியாக தலைமை ஏற்று  கலியுக மக்கள் வாழ்க்கை முறை எவ்வாறெல்லாம் இருக்கவேண்டும் என கூறும் வாழ்வியல் என்னும் நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் (The Science and Purpose of Life) வெளிவரவுள்ளது.
அன்று மிக உன்னத தெய்வீக நிகழ்வுகள் நடக்க உள்ளது. அனைவரும் தவறாது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உன்னத அனுபவங்கள் பெற்றிடுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Friday, May 17, 2019

ஆதவ/சூரிய தரிசன உன்னத அனுபவங்கள்

ஆதவ/சூரிய தரிசன உன்னத அனுபவங்கள்

கடந்த 2018 நவம்பர் மாதத்தில் ஆதவ வழிபாடு குறித்து முருகப்பெருமான் அரசாட்சி புரியும் பாண்டிச்சேரி ஞானாலயத்தின் யூடியூப் காணொலி மூலம் அறிந்து இறையருளால் உடனே செயல்படுத்த ஆரம்பித்தேன்.

2018 கார்த்திகை மாதத்தில் தொடங்கிய ஆதவ வழிபாடு பல தெளிவுகளையும் அகவாழ்வு இகவாழ்வு ஏற்றங்களையும் தந்து கொண்டு உள்ளது.

ஈசனை விரைந்து அடையவும் ஒளியுடல் பெறவும், அகக்கண் திறந்து சிறந்த மாமனிதராய் வாழவும் சூரிய தரிசனமே மிகச் சிறந்த வழி.

ஞானாலய புத்தகமான பாரத்வாஜ மகரிஷிகள் அருளிய ஆகம வேதமும் வால்மீகி மற்றும் அகத்திய மகரிஷிகளின் கலியுக காவியம் - ஆத்மாவின் சுயசரிதமும்



ஆதவ தரிசனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த அவரைப் பார்க்கும் நேரம் ஒவ்வொரு நாளும் அதிகரித்தது.

செந்நிறக்கதிரோன் உதித்த நேரம் அவரைக் கண்டு நீர் எடுத்து "எனக்கு பரிபூரண ஞானத்தை தந்தருளுங்கள்" என உள் உருக ஒன்றி வேண்டி நீரினை நிலம் விடுத்து ஆதவ மையத்தினை தரிசிக்க ஆரம்பித்தல் வேண்டும்.
முதல் நாள் ஈச அலைகள் அதிகம் வரும் முதல் 24 நிமிட   நேரத்தில் ஆதவக் கதிர் அளிக்கும் உள் முக ஏற்றங்களை உணர ஆரம்பித்தேன்.
அடுத்தடுத்த  நாள் அந்தி சந்தியில் நிமிடங்களை அதிகப்படுத்த பல அற்புதங்கள் உள் நிகழ ஆரம்பித்தது. இது 1.20 மணி நேரம் வரை சென்றது, அதற்கு மேல் பார்த்தால் வெப்ப ஆற்றலே உள் புகும்.

ஆதார சக்கரங்கள் ஒளிவெள்ளத்தால் நிரம்பி பரவுவதையும் உடல் நிலை சீரடைவதையும் கண்கள் பலமாவதையும் உணரலாம். ஒவ்வொரு செயலிலும் அகப்பார்வை மிகுந்து செயல்படுவதை உணரலாம். மேலும்  பல தெளிவுகள் பொதுவில் குறித்திட இயலாது.  உணர்ந்து அனைவரும் சீரடைந்திட வேண்டும்.

மேலும் ஆதவ ஒளி நேர்மறை உணவு (நேர்மறையை எதிர்மறையாக்கி அணுக்களுக்கு உணவாக்கும் ஆத்மா)  என்றால் முழு நிலவு என்பது ஆதவனுக்கு சமம். நேரடி உணவாகும் அணுக்களுக்கு. சிரசு உச்சி நஞ்சகன்று மெலிதாக இருக்கும் அன்று இந்நேரடி எதிர்மின்காந்த அலைகளைப் பெற முடியும்.  க. காவியம் அ-111.
எனவே முழுநிலவு ஒளியையும் 1-3 மணி நேரம் தரிசிக்க  தேகத்தில் மேற்குறிப்பிட்ட நிலைகள் விரைந்து ஏற்பட்டன.
மேலும் ஆழ்ந்த தெளிவு பெறவும் சிரசின் நிலை, அணுக்களின் நுண்நிலைகள் குறித்து அறியவும் மேற்குறிப்பிட்ட புத்தகங்களை வாங்கி பயனடையுங்கள். http://enlightenedbeings.org/books.php

ஆதவ வழிபாடு குறித்து சித்தர்கள் அருளிய செய்திகளை சகோதரி ஜெயந்தி ரவி அவர்கள்:


வருகின்ற ஜுன் மாதம் 9ம் தேதி ஆறுமுகனார் தீட்சை நடக்க உள்ளது. தொடர்ந்து மூன்று மாதங்கள் நடைபெற்று பின் பயிற்சியை ஒன்றி செய்ய அடுத்து வரும் ஐப்பசி பௌர்ணமியில் ஆறுமுகனார் தேர்ந்தெடுக்க ஆத்ம விடுதலை அடைந்து பிறவியில்லா பெறும்பேறு அடையலாம். தீட்சையில் கலந்து கொள்ள கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கவும்.


  

Friday, February 15, 2019

பொன்னும் பொன் போன்ற தேகம் பெற தங்க ஆனந்தக் களிப்பு

                            தங்க ஆனந்தக் களிப்பு 


       ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய தங்க ஆனந்த களிப்பு  அவரது பாடல் தொகுப்பில் 6ம் மண்டலத்தில் அமைந்துள்ளது.  இம்மை, மறுமை வறுமையை போக்கி அருட் செல்வத்தினையும் பொருட் செல்வத்தினையும் பெற சிவ சுப்ரமணியனின் பால் இயற்றப்பட்ட தங்கமயமான துதி ஆகும். இது 10 பாடல்களை உடையது.  கர்மவினைகளை அழித்து செய் தொழிலில்  லாபத்தினை அளிக்கக்கூடியதாகும். மனதிற்கு அமைதியைத் தர வல்லது.  மனம் கடந்த அந்த அன்பின் ஊற்றாம் திருமுருகனைப் போன்ற பொன் தேகத்தினை, பிரணவ தேகத்தினை,  நிழல் விழா தேகத்தினைத் தரவல்லது.  SOUNDCLOUD LINK

இனி பாடல்....


சுயமான தங்கம் இத்தங்கம்  - சிவ
சுப்பிரமணியம் எனும் தெய்வத் தங்கம்

அந்தரர் வேண்டொரு தங்கம் -  ஈறில்
அருசிகரக்கிரி நின்றெழு தங்கம்
சுந்தரமாய்ச் சுடர் தங்கம்  - உமை
துங்க மலர்க் கரந் தங்கொரு தங்கம்             1

வேதத்திலே உள்ளத் தங்கம் -  சுத்த
வித்தை சொல் ஆகம நித்தியத் தங்கம்
நாதத்தின் மேலுள்ளத் தங்கம்  - அந்த
நாதம் கடந்தபின் நாம் அடை தங்கம்            2

பார்ப்பவர்க் கின்புசெய் தங்கம்  - சிவ
பாக்கியமெலாம் பகுக்கின்ற தங்கம்
சீர் பரதத்துவத் தங்கம்  -  நிறை
சிற்பர தேஜோமய ஆனந்தத் தங்கம்              3

நினைப்பவர்க் கின்பு செய்த் தங்கம் -  தொண்டர்
நெஞ்செனும் பேழையிலே நிறை தங்கம்
வினைப் பவம்வெல் பசுந் தங்கம்   - ஞான
விளைவற்ற பூமியில் புதைபட்ட தங்கம்      4

வாதிகட்கு எட்டாத தங்கம்   -  அன்பு
வறண்டலைவோர் அறியா வருந்தங்கம்
தீதிகற் சூழ்களை தங்கம்  -  தவச்
செல்வர்க்கு செல்வமதாந் திருத் தங்கம்              5

அஞ்செனத் தெட்டாதத் தங்கம்   -  பத்தி
யஞ்செனத் தேயெட்டும் அற்புதத் தங்கம்
செஞ்செயத் தைத்தரு தங்கம்     -  சிவ
சித்தர்கள் யோகிகள் மெச்சிடு தங்கம்                   6

மாற்றில் உயர்ந்தொளிர் தங்கம்  -  எல்லா
மங்கும் படிக்கருள் செய்தனித் தங்கம் 
ஆற்றலின் மேம்படு தங்கம்          -   பகி
ரண்டமெல்லாம் விலை கொண்டுயர் தங்கம்    7

அளவைக் கடங்காத தங்கம் - தினம்
அனலிட் டுருக்கினும் உருகாத தங்கம்
களவுக் கிணங்காத தங்கம்   -  தன்னைக்
காமுறுவார் மிடிதீர்க்கின்ற தங்கம்                        8 

யாதனையைத் தெரு தங்கம்    -   தெய்வ
யானை விழிக்கிதமாய் அவிர் தங்கம்
ஏதனையா  நறுந் தங்கம்  எழில்
ஏனலினோர் கொடிதான் படர் தங்கம்                   9


ஞான விண்ணாகின்ற தங்கம்   -  நல
நல்குந்திருப்புக ழோன் கண்ட தங்கம்
வானவர் மாமுடித் தங்கம்          -  நம்மை
வாழ்விக்க வந்த பராபரத்   தங்கம்                         10


பொருள்;    ஏனலினோர் *   தினைப்புனம் ( தினை விளையும் மலை) காப்போர்