இனிய தாலாட்டுப் பாடல் -வேல் குழவியை வரவேற்றுத் தழுவி உச்சி மோந்து மெய்மறக்க! குழந்தைப் பேறு வேண்டுவோர் உள்ளன்புடன் உணர்ந்து ஓத/ பாட வேண்டிய பாடல்!
பாம்பன் சுவாமிகளால் இயற்றப்பட்டது.
மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே.
மதிபோல் மாமைமுக மண்டலம் ப்குக்கநகுங்
கதியே வேற்குழவீ நின்னைக் காதலால் த்ழுவ
நிதியே வாராயோ கைகள் நீளுகின்றனவே
1.தேவர் (சுரர்களாகிய தமிழர்கள்),
2.சித்தர் (சித்ததை நிலைநிறுத்தி அட்டமா சித்திகளை அடைந்து உயிர்களைக் காப்போர்),
3.அசுரர் (ஆரியர்கள்),
4.தைத்தியர் (அரக்கர் எனும் சிவப்பு இந்தியர் -செம்மர்,பொன்னியர், இரணியர் எனவும் கூறப்படுவர்),
5.கருடர்,
6.கின்னரர் ( மேற்புறம் மனித உருவமும் இடுப்பிற்கு கீழ் குதிரை வடிவமும் கொண்ட ஆடற்கலையில் வல்லவர்கள்),
7.நிருதர் (தமிழகத்தின் தென்மேற்கில் இருக்கும் ஆப்ரிக்க நாட்டவர். வரைமார்பர்) ,
8.கிம்புருடர் (இமயமலைப்பகுதியில் வாழ்ந்த உயர்சக்திகொண்ட , சிங்க முகமும் மனித உடலும் கொண்டவர்கள். கிம்புருடர்கள் கின்னரர்களுடன் தொடர்புடைய இனக்குழுவினர்),
8.காந்தருவர் (தேவர்களின் உதவியாளர்கள்),
9.இயக்கர் (உருவமற்ற, மனிதரல்லாதவர்.. இயற்கை வளங்களைக் காப்பவர்கள்.வேடுவர்களின் மூத்தோர்),
10.விஞ்சையர் (பறக்க வல்லவர்கள்; வித்தைகளில் வல்ல வித்யாதரர்கள்),
11.பூதர் (மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்த துணை தெய்வங்கள்; ஆடல், பாடல்களில் விருப்பமும், இசைக்கருவிகளை இசைப்பதில் தேர்ச்சி பெற்றும், சிவபெருமானைத் தலைவனாகக் கொண்டு, அவரை விட்டுப் பிரியாது இருப்பர் பூதர்கள். சிவபெருமான் அளிக்கும் செல்வத்தை எடுத்துச் சென்று பக்தர்களுக்குத் தருபவர்கள்) ,
12.பிசாசர் (மனிதர்களில் குடி கொண்டு தங்கள் விருப்பப் படி ஆட்டிப் படைப்பவர்கள்; மனித மாமிசத்தை உண்ணும் கொடூரமான, கோபக் குணமும், வடிவமற்றவர்கள்) ,
13.அந்தரர் (இருள் துறந்து ஒளி பொருந்திய விண்ணுலகத்தில் வசிக்கும் புண்ணியர்),
14. முனிவர் (மௌனமாய் தனித்திருந்து தவநிலையில் வாழ்வோர்),
15.உரகர் ( தெய்வீக நாகர்கள் -மேல் பாதி மனித உடல், கீழ்பாதி நாக உடல்),
16.ஆகாயவாசியர்,
17.போக பூமியர்
18. விண்மீன்கள் எனப்படும் 18 கணங்கள்.
பதினெட்டுக் கணங்களும் போற்றுகின்ற சேவடி (யில் உள்ள தண்டை, கிண்கிணி முதலியவை) ஒலித்திடக் களங்கமற்ற நிலவை ஒத்த நின் அழகிய முகமண்டலம் ஒளி செய்யும்படி புன்முறுவல் செய்யும் (உயிர்களுக்குப்) புகலிடமாய் உள்ளவனே! வேல் ஏந்திய குழந்தைத் திருமேனி கொண்டவனே! என் செல்வமே! உன்னைக் காதலோடு தழுவிக் கொள்ள என் கைகள் நீளுகின்றனவே. நீ வந்தருளாயா?
மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
கூவை வெறுத்தகண்க ளிச்சை கொள்ளு கின்றனவே.
மேவும் உ றுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ !
ஏவல் கொடுத்தருள எண்ணி என்முன் வாராயோ?
கூவை வெறுத்த கண்கள் இச்சை கொள்ளு கின்றனவே.
சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே.
சே ஏறுன் பவளத் தெய்வ வாயையே திறந்து
தூவேறு இன்கரைகள் இங்குச் சொல்ல வாராயோ?
கோவே! என்செவிகள் இச்சை கொள்ளு கின்றனவே.
கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ
உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே.
கொன் ஆர் வேற்குழவீ ! நல்ல கொவ்வை நின் இதழை
என் ஆர் வந்தீர இங்கு நல்க வாராயோ?
உன் ஆர் உண் நிலையும் வாயும் ஊறுகின்றனவே.
கண்ணே செங்குழுவீ யென்றன் கண்க ணாடழகே
தண்ணே றும்வதன முத்தந் தாரா யோயிறிது
நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ
கண்ணே! செங்குழுவீ ! என்றன் கண்கள் நாடு அழகே!
தண் ஏறும் வதன முத்தந் தாராயோ பிறிது
நண்ணா என் உளந்தான் நின்னை நாடு கின்றதரோ
வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ.
வைத்து ஆரம் புனைந்து என் முன்னர் வாராயோ? உ ழலுஞ்
சித்து ஆர் வேற்குழவீ ! உச்சி செவ்வன் மோந்துகொள்ள
வித்தே! என் மூக்கில் இச்சை மீறு கின்றதரோ.
வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்துகொள்ள
மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ
வை ஆர் வேற்குழவீ ! இங்கு வாராயோ? கால்கள்
மை ஆர் கண்மலர்கள் இன்பு மல்க மோந்துகொள்ள
மெய்யா என் மூக்கில் இச்சை மீறுகின்றதரோ
இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ.
இன்பே! வேற்குழவீ ! இங்கு வாராயோ? விரியா
அன்பு ஆர் புன்முறுவல் செய்யும் ஆர்வில் பல் அழகென்
துன்பு ஈர் அம்பு எனவே நெஞ்சம் துள்ளு கின்றதரோ.
கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே.
கிள்ளாய்! வேற்குழவீ ! அன்பர் கேளே! மாது உமையாள்
பிள்ளாய்! கண்ணி ஒன்று நல்ல பெட்பில் நான் தருவேன்
தள்ளாதே கொளற்கு என் முன்னர் வாராயோ தகையே.
காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ.
காண்பார் வேறு அழகு இங்குக் காண்பார் கொல்லோ? நான்
ஊண் பாடு அஞ்சி உனை நன்கு காண்பான் இன்றுவந்தேன்
வீண் போகாதபடி இங்ஙன் வாராய் வேற்குழவீ.